சபரிமலை :சபரிமலையில் அறைகளை ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்தும், நேரடியாகவும் பெற ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.சபரிமலையில் மதியம்12:00 மணிக்கு பின்னர் நெய் அபிஷேகம் கிடையாது.
மதியத்துக்கு பின் வரும் பக்தர்கள் தங்க வேண்டியுள்ளது. இவர்களுக்கு ஆன்லைன் மூலமும், அறை முன்பதிவு அலுவலகம் மூலம் நேரடியாகவும் அறைகள் வழங்கப்படுகிறது.ஆன்லைன் மூலம் பதிவு செய்ய விரும்புபவர்கள் www.online tdb.com என்ற இணையதளத்தில் சென்று பெயர், முகவரி, இமெயில், அலைபேசி எண் பதிவு செய்து ஒரு பயனாளர் பெயர், ரகசிய குறியீடு உருவாக்க வேண்டும். ஆன்லைனில் கட்டணம் செலுத்தி அறைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.சன்னிதானம் வந்த பிறகு அறை தேவைப்பட்டால் பாண்டிதாவளம் செல்லும் 108 படிக்கட்டு அருகே உள்ள அறை ஒதுக்கீடு அலுவலகத்தை அணுகலாம். மாலை 4:00 மணி முதல் அறைகள் பெற முடியும். 12, 16 மணி நேரம் என இரண்டு பிரிவுகளில் அறைகள் கிடைக்கும். மேலும் விபரங்களுக்கு 04735 202049 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.