டிச. 26ல் சூரிய கிரகணம்: சபரிமலையில் 4 மணி நேரம் நடை அடைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25நவ 2019 11:11
சபரிமலை: டிச., 26ல் சூரிய கிரகண நேரத்தில் சபரிமலை நடை நான்கு மணி நேரம் அடைக்கப்படும். இதனால் நெய் அபிஷேக நேரம் குறையும்.
டிச., 26 காலை 8:06 மணி முதல் 11:13 வரை சூரிய கிரகணம் இருப்பதால் நான்கு மணி நேரம் நடை அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்த பின் நெய் அபிஷேகம் ஆரம்பமாகும். 6:45 மணிக்கு அபிஷேகம் நிறுத்தப்பட்டு கோயில் சுத்தம் செய்யப்படும். காலை 7:15 மணிக்கு உஷபூஜை நடக்கும். 7:30 மணிக்கு நடை அடைக்கப்படும். கிரகணம் முடிந்து 11:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு நெய் அபிஷேகம் நடக்கும். அன்று பகல் 1:00 மணிக்கு பதிலாக சற்று தாமதமாக நடை அடைக்கப்படும்.
காலையில் நடை அடைக்கும் போது பக்தர்கள் படியேற அனுமதிகப்படுவரா என்பது பற்றி தெரிவிக்கப்படவில்லை. அன்றுதான் மண்டலபூஜைக்கான தங்க அங்கி சன்னிதானம் வரும். இதனால் மதியம் நடை அடைக்கப்பட்ட பின் பக்தர்களுக்கு தரிசனம் கிடையாது. மாலை 5:00 மணிக்கு நடை திறந்து தங்க அங்கி அணிவிக்கப்பட்ட பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். நவ., 27 மண்டல பூஜை நேரத்துக்கு ஏற்ப நெய் அபிஷேக நேரம் குறையும். அதற்கேற்ப பக்தர்கள் பயணத்திட்டதை வகுத்துக் கொள்ள வேண்டும்.