பதிவு செய்த நாள்
25
நவ
2019
12:11
திருவனந்தபுரம் : சபரிமலைக்கு தனிச் சட்டம் கொண்டுவர வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளதற்கு, திரு விதாங்கூர் தேவசம்போர்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சபரிமலைக்கு தனிச் சட்டம் கொண்டு வரவேண்டும் என்றும், ஜனவரியில் இது தொடர்பாக, மாநில அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு, சபரிமலையை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனு தாக்கல் செய்து நிலைமையை விளக்க, தேவசம் போர்டு தலைவர், வாசு தலைமையில், திருவனந்தபுரத்தில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
திருவிதாங்கூர் தேவசம்போர்டின் கீழ், 1,250 கோவில்கள் உள்ளன. அதில், 60 கோவில்கள் மட்டுமே, அவற்றின் வருமானத்தில் நிர்வகிக்கப் படுகின் றன. மீதமுள்ள கோவில் களுக்கும், 6,000 ஊழியர் கள், 4,000 பென்ஷன் தாரர்களுக்கும், சபரிமலை வருமானத் தில் செலவு செய்யப் படுகின்றன. இந்த நிலையில், தனிச்சட்டம் வரும் போது, சபரிமலை வருமானத்தை வேறு எதற்கும் எடுக்கக் கூடாது என்ற நிலை வந்தால், கோவில்கள் மற்றும் ஊழியர்கள் நிலை கேள்விக்குறியாகி விடும் என, தேவசம் போர்டு கவலை தெரிவித்துள்ளது.சபரிமலையை நிர்வ கிக்க தனி அமைப்பு வேண்டும் என்ற அரசின் நிலைப்பாட்டை, தேவசம்போர்டு வரவேற் கிறது. ஆனால், அந்த அமைப்பு, தேவசம் போர்டின் கீழ் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுஉள்ளது.