பதிவு செய்த நாள்
26
நவ
2019
10:11
சபரிமலை: ஒரு வார காலத்தில், சபரிமலை வருமானம், 17 கோடி ரூபாயாக உயர்ந்தது.
மண்டல கால பூஜைக்காக, சபரிமலை நடை, 16-ம் தேதி திறந்தது. தொடர்ந்து, பக்தர்கள் வருகின்றனர். மூன்று நாட்களாக கூட்டம் அதிகரித்து, பெரிய நடைப் பந்தலில், பக்தர்களின் நீண்ட வரிசை உள்ளது. ஒரு வார காலத்தில் சபரிமலை வருமானம், 17 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு, இதே நாளில், 3 கோடியே, 34 லட்சம் ரூபாயாக இருந்த காணிக்கை, தற்போது, ஆறு கோடியே, 66 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. அரவணை விற்பனையில், 3.37 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. மொத்த வருவாய், 17 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு பெண்கள் வருகை பிரச்னை காரணமாக, போலீஸ் விதித்த கட்டுப்பாடுகளால், பக்தர்கள் எண்ணிக்கை பெருமளவு குறைந்து இருந்தது.