சபரிமலை: சபரிமலை கோசாலையில் பசு, காளைகளின் எண்ணிக்கை பெருகி வருகிறது. சபரிமலையில் மூலவர் அபிஷேகத்திற்காக கொல்லத்தை சேர்ந்த பக்தர் 20 ஆண்டுகளுக்கு முன் பசுவை காணிக்கையாக வழங்கினார்.
அதற்கான உணவு, அதை பராமரிக்கும் ஊழியரின் சம்பளம் என அனைத்தையும் அந்த பக்தரே இன்றும் வழங்கி வருகிறார்.அந்த பசு மூலம் இனப்பெருக்கம் நடந்து தற்போது 15 பசுக்கள், எட்டு காளை, நான்கு கன்று குட்டிகளுமாக கோசாலையாக மாறி உள்ளது. பக்தர்கள் வழங்கிய 25 கோழிகள், ஆறு ஆடுகளும் கோசாலையில் உள்ளன.மேற்கு வங்கத்தை சேர்ந்த ஆனந்த் சாமந்தா அங்கேயே தங்கி கோசாலையை பராமரிக்கிறார். அதிகாலை 2:00 மணிக்கு குளித்து, பால் கறந்து, 3:00 மணிக்கு முன் சன்னதியில் சேர்க்கிறார்.ஐயப்பனுக்கு பணிவிடை செய்ய வாய்ப்பு கிடைத்தது வாழ்க்கையில் கிடைத்த பெரிய பாக்கியம் என்கிறார்.