திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், உலக நன்மைக்காக மகாபைரவர் வழிபாடு நடந்தது.
திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், கார்த்திகை ஞாயிற்று கிழமை, ராகு கால மகா பைரவர் பூஜை, உலக நன்மைக்காக நடத்தப்பட்டது. பைரவருக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு கூட்டு வழிபாடு செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர்.