சிவன் கோயில்களில், பெருமாள் இருப்பதும், பெருமாள் கோயிலில் சிவன் இருப்பதும் மிகக் குறைவு. அதுவும் லிங்க வடிவில் இருப்பது அபூர்வம். திருநெல்வேலி மாவட்டத்தில், திருக்குறுங்குடி நம்பி கோயிலில் மகேந்திரகிரிநாதர் என்ற பெயரில் சிவலிங்கம் உள்ளது. மலை உச்சியிலுள்ள இக்கோயிலில், இரு தெய்வங்களையும் ஒருசேரத் தரிசிக்கலாம்.