சொத்து வாங்க...பெங்களூரு வராக சுவாமி கிட்ட போங்க...
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஏப் 2012 02:04
கர்நாடகா பெங்களூரிலிருந்து மண்டியா வழியாகச் சென்றால் சுமார் 145 கி.மீ. தொலைவில் கலஹள்ளி உள்ளது. இங்குதான் இரண்டாயிரம் ஆண்டு பழமையான வராக சுவாமி கோயில் உள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணைகட்டப்பட்ட போது, அதனால் இருபது கிராமங்கள் மூழ்கும் என நம்பப்பட்டது. அதில் ஒன்று கலஹள்ளி! ஆனால் அதிர்ஷ்டவசமாக கலஹள்ளி மூழ்கவில்லை. அதனால் வராக ஸ்வாமி கோயிலும் தப்பியது. நிலம், சொத்து வாங்க விருப்பப்படுபவர்கள் இங்குள்ள வராக சுவாமியை கும்பிட்டு காரியம் நிறைவேறியதால் இந்தக் கோயிலுக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. வராக சுவாமி மட்டும், தாயாரை மடியில் வைத்தபடி கம்பீரமாக புன்னகை பூத்தபடி உள்ளார். இந்தக் கோயில் காவிரி... ஹேமாவதி.. லட்சுமண தீர்த்தம் என்ற மூன்றும் சங்கமிக்கும் இடத்தில் உள்ளது. இந்தக் கோயில் 900 வருடங்களுக்கு முன் விஷ்ணுவர்த்தன் பரம்பரையைச் சார்ந்த வீர பல்லாலா என்ற அரசனால், புதுப்பிக்கப்பட்டது.