சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) குடும்பத்தில் குதூகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13டிச 2019 05:12
புதுமை எண்ணம் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!
இந்த மாதம் முக்கிய கிரகங்களில் 11ல் இருக்கும் ராகுவால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். ராசிக்கு 5ல் இருக்கும் குரு குடும்பத்தில் குதுாகலத்தை கொடுப்பார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். சகோதரவழியில் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய வீடு,மனை, வாகனம் டிச.28க்குள் வாங்கலாம்.
சூரியன் விருச்சிகத்தில் இருந்து தனுசுவுக்கு மாறினாலும் நன்மை தர மாட்டார். செவ்வாய் டிச.28 வரையும் புதன் டிச.21 வரையும், ஜன.7க்கு பிறகும் நற்பலன் கொடுப்பர்.
கடவுளின் கருணை உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்வீர்கள். டிச.21 முதல் ஜன. 7 வரை கணவன், மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். மனைவி, மக்கள் மத்தியில் குழப்பம் உருவாகலாம். வீண் அலைச்சல் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தினரால் பிரச்னை வரலாம். பெண்களுக்கு தோழிகள் ஆதரவுடன் செயல்படுவர். திருமணம் ஆகாதவர்களுக்கு சுபவிஷய பேச்சு நடக்கும். ஜன.7க்கு பிறகு நல்ல முடிவும் கிடைக்கும். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். புத்தாடை, அணிகலன் வாங்கலாம்.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு பண வரவுக்கு பஞ்சம் இருக்காது. கோயில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழிலில் லாபம் பன்மடங்கு உயரும். * வியாபாரிகளுக்கு கடந்த மாதத்தில் பெண்கள் வகையில் இருந்த பிரச்னை மறையும். ஆனால் போட்டியாளர்களால் தொல்லை ஏற்பட்டாலும் பாதிக்காது. * அரசு வேலையில் இருப்பவர்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். வீண் அலைச்சல், வேலைப்பளு குறையும். * போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் முன்னேற்றம் காண்பர். வருமானம் அதிகரிக்கும். கோரிக்கைகளை டிச.28க்குள் கேட்டு பெறவும். * தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு ஜன.7க்கு பிறகு அதிகாரிகளின் ஆலோசனை கிடைக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பர். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். * மருத்துவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பார்த்த இடமாறுதல் தானாக வந்து சேரும். * ஆசிரியர்களுக்கு அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். பதவி உயர்வும் கிடைக்கும் * அரசியல்வாதிகள் சிறப்பான வளர்ச்சி காண்பர். சிலருக்கு புதிய பதவியும் தேடி வரும். * விவசாயிகளுக்கு வருமானத்திற்கு குறைவிருக்காது. கீரை வகைகள், காய்கறிகள், பயறு வகைகள், நெல், கோதுமை போன்றவை மூலம் அதிக மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் உண்டு. கால்நடை வளர்ப்பின் மூலம் அதிக வருமானம் வரும். * கல்லூரி மாணவர்களுக்கு முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர்.
சுமாரான பலன்கள்:
* தொழிலதிபர்களுக்கு டிச.21க்கு பிறகு அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக அடிக்கடி பயணம் ஏற்படலாம். * தரகு, கமிஷன் தொழிலில் ஈடுபடுவோர் யாரிடமும் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம். * ஐ.டி., துறையினர் வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. திடீர் இடமாற்றம் ஏற்படலாம். * வக்கீல்கள் டிச.21 முதல் ஜன.7 வரை வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம் * பொதுநல சேவகர்கள் டிச.28க்கு பிறகு எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்க தாமதம் ஏற்படும். சிலர் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கலாம். அனைவரிடமும் எச்சரிக்கையுடன் பழகவும். * கலைஞர்கள் சுமாரான நிலையில் இருப்பர். சிரத்தை எடுத்தால் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். * பால்பண்ணைத் தொழிலில் டிச.21 முதல் ஜன.7 வரை கால்நடை வகையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. * பள்ளி மாணவர்கள் சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும்.
* நல்ல நாள்: டிச.17,18,21, 22,23,28,29,30 ஜன.1,7,8,9,10,14