Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷபம் : சித்திரை ராசி பலன் கடகம் : சித்திரை ராசி பலன் கடகம் : சித்திரை ராசி பலன்
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் ((14.4.2026 முதல் 14.5.2026 வரை)
மிதுனம் : சித்திரை ராசி பலன்
எழுத்தின் அளவு:
மிதுனம் : சித்திரை ராசி பலன்

பதிவு செய்த நாள்

10 ஏப்
2026
12:04

மிதுனம்


மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்

திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் நன்மையான மாதமாகும். உங்கள் லாபாதிபதி செவ்வாய் மே 10 வரை ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். இதுவரை நிறைவேறாமல் இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ் தொழில் லாபம் தரும். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் மோட்சக்காரகன் கேது உங்கள் நம்பிக்கையை அதிகரிப்பார். துணிச்சலுடன் செயல்பட வைப்பார். பிறரால் முடிக்க முடியாத வேலைகளையும் முடித்து அதில் ஆதாயம் காண்பீர்கள். ராசிநாதன் புதன் மே 9 வரை சாதகமாக சஞ்சரிப்பதால் வியாபாரிகளுக்கும், கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். கேட்ட இடத்திலிருந்து பணம் வரும். கடன் தொல்லைகள் விலகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். பெரியோரின் ஆதரவும், துணையும் உங்களை முன்னேற்றப் பாதையில் நடைபோட வைக்கும். ஜீவனக்காரகன் சனி பகவான் ஜீவன ஸ்தானத்திலேயே சஞ்சரிப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் கவனமாக இருப்பது நன்மையாகும். பிறருடைய சிபாரிசுகளுக்கு இந்த நேரத்தில் இடம் கொடுக்க வேண்டாம். அதேபோல் உங்கள் அதிகாரத்தையும் தவறாக பயன்படுத்த வேண்டாம். அது உங்களுக்கே எதிர்மறையான பலன்களை உண்டாக்கிவிடும். வியாபாரிகள் புதிய முதலீடுகள் மேற்கொள்வதற்கு முன் மார்க்கெட் நிலவரத்தை அறிந்து செயல்படுவது அவசியம். சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் ஒரு இணக்கமான நிலை உருவாகும். குடும்பத்திற்குள் அந்நியரால் ஏற்பட்ட பிரச்னைகள் இருந்த இடம் தெரியாமல் போகும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு தகுதியான வரன் வரும். சிலருக்கு கழுத்தில் மணமாலை ஏறும். இந்த மாதம் அனைத்து வகையிலும் உங்களுக்கு யோகமான மாதமாக இருக்கும். மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்ணும் விரும்பிய கல்லுாரியில் இடமும் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: மே 8.

அதிர்ஷ்ட நாள்: ஏப். 14, 18, 23, 27. மே 5, 9, 14.


பரிகாரம்: காளத்தீஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மைகள் நடக்கும்.


திருவாதிரை

முயற்சியால் முன்னேற்றம் அடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் முன்னேற்றமான மாதமாகும். பாக்ய ஸ்தானத்தில் குரு பகவானின் பார்வையுடன் சஞ்சரிக்கும் ராகு உங்கள் செல்வாக்கை அதிகரிப்பார்.  வெளிநாட்டு முயற்சிகளை சாதகமாக்குவார். பொன் பொருள் சேர்க்கையை அதிகரிப்பார். அரசியல் வாதிகள், அதிகாரத்தில் இருப்பவர்கள் கனவுகளை நனவாக்குவார். மாதம் முழுவதும் லாப ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் சகாய ஸ்தானாதிபதி சூரியன் இதுவரை இருந்த நெருக்கடிகளில் இருந்து உங்களை விடுவிப்பார். எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைய வைப்பார். தொழிலில் ஏற்பட்ட தடைகள், பிரச்னைகளை எல்லாம் இருந்த இடம் இல்லாமல் செய்வார். உங்களுக்குள் புதிய நம்பிக்கையை உருவாக்குவார். சகோதரர்கள் வழியில் ஏற்பட்ட இடைவெளியை அகற்றுவார். உத்தியோகத்தில் சந்தித்த சங்கடங்களை இல்லாமல் செய்வார். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த மாற்றத்தை வழங்குவார். தொழிலில் லாபம் இல்லை, வியாபாரத்தில் முன்னேற்றம் இல்லை என்று வருத்தப்பட்டு வந்தவர்களின் கவலையை போக்குவார். கையில் பணம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு கடந்த காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் எல்லாம் விலகும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரனும் சாதகமாக சஞ்சரிப்பதால் வீட்டில் நிம்மதி இருக்கும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை ஏற்படும். பொன் பொருள் சேரும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். மாணவர்களுக்கு பொதுத்தேர்விலும் போட்டித்தேர்வுகளிலும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்விக்குரிய வழி பிறக்கும்.

சந்திராஷ்டமம்: மே 8, 9.

அதிர்ஷ்ட நாள்: ஏப். 14, 22, 23, மே 4, 5, 13, 14.


பரிகாரம்: வடிவுடை அம்மனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.


புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்


பிறருக்கு வழிகாட்டியாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் யோகமான மாதமாகும். ஜென்ம ராசிக்குள் சுபகாரகனான குரு சஞ்சரிப்பதால் அலைச்சல், உழைப்பு அதிகரிக்கும். தொழில், உத்தியோகத்தின் காரணமாக வெளியூரில் சென்று தங்க வேண்டிய நிலை சிலருக்கு ஏற்படும். அதனால் குடும்பத்திற்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி ஏற்படும் என்பது விதி. இருந்தாலும் குரு பகவானின் பார்வைகள் 5, 7, 9 ம் இடங்களுக்கு இக்காலத்தில் கிடைப்பதால் பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். வழக்கு சாதகமாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். குழந்தைக்காக ஏங்கியவர்களின் ஏக்கம் தீரும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும்.  நட்பில் ஏற்பட்ட விரிசல் விலகும். கூட்டுத்தொழில் லாபம் அடையும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்டிருந்த பிரச்னை தீரும். சூழ்நிலை காரணமாக பிரிந்திருந்தவர்களும் மீண்டும் ஒன்று சேரக்கூடிய நிலை உருவாகும். சொந்த இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். சிலர் சொந்த வீட்டில் பால் காய்ச்சுவீர்கள். உங்கள் செயல்களுக்கு விஐபிகள் ஆதரவாக இருப்பார்கள். ஆத்ம காரனான சூரியனும் லாப ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகள் எல்லாம் தொய்வின்றி நடந்தேறும். அரசுவழி முயற்சிகள் சாதகமாகும். வேலையில் இருப்பவர்களுக்கு மெமோ, இடைநீக்கம் என்று ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கும் வியாபாரிகளுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வராமல் இருந்த பணம் வரும். சேமிப்பு உயரும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். தொழிலாளர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஆதாயம் உண்டாகும். மாணவர்களின் முயற்சி வெற்றியடையும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: மே 9, 10.

அதிர்ஷ்ட நாள்: ஏப். 14, 21, 23, 30. மே 3, 5, 12, 14.


பரிகாரம்: ஆபத் சகாயேஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும்.

 
மேலும் சித்திரை ராசி பலன் ((14.4.2026 முதல் 14.5.2026 வரை) »
temple news
மேஷம்அசுவினிநேர்மையாக வாழ்ந்துவரும் உங்களுக்கு, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் மோட்சக்காரகன் கேது, பூர்வ ... மேலும்
 
temple news
ரிஷபம்கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்எடுத்த வேலைகளை முடிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
கடகம்புனர்பூசம் 4 ம் பாதம்எதிலும் தெளிவாக செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்மகம்விடாமுயற்சி செய்பவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் வெற்றி தரும் மாதமாக இருக்கும். ... மேலும்
 
temple news
கன்னிஉத்திரம் 2, 3, 4 ம் பாதம்நினைத்ததை முடிப்பதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar