Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மிதுனம் : சித்திரை ராசி பலன் சிம்மம் : சித்திரை ராசி பலன் சிம்மம் : சித்திரை ராசி பலன்
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் ((14.4.2026 முதல் 14.5.2026 வரை)
கடகம் : சித்திரை ராசி பலன்
எழுத்தின் அளவு:
கடகம் : சித்திரை ராசி பலன்

பதிவு செய்த நாள்

10 ஏப்
2026
12:04

கடகம்


புனர்பூசம் 4 ம் பாதம்


எதிலும் தெளிவாக செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் யோகமான மாதமாகும். குரு பகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செலவு அதிகரிக்கும் என்ற எண்ணம் வரும். சுபக்கிரகமான குரு பகவான் வீடு, மனை, வாகனம், குடும்பத்தில் விசேஷம் என்று சுபச்செலவுகளையே ஏற்படுத்துவார். அதனால் உங்கள் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இதுவரையில் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து பல்வேறு நெருக்கடிகளை உண்டாக்கி வந்த சனி பகவான் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். 12 ராசிகளில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலங்களில் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போதுதான் ஜாதகருக்கு மிகப்பெரிய யோகத்தை வழங்குவார். அதற்கு காரணம் அவருடைய பார்வைகள் 3,6,11 ம் இடங்களுக்கு உண்டாவதுதான். சனி பகவானின் பார்வை சங்கடங்களை உண்டாக்கும் என்றாலும் 3,6,11ம் இடங்களைப் பார்க்கும்போது இந்த இடங்களுக்கு யோகப் பலன்களையே வழங்குவார். இதனால்தான் 30 ஆண்டுகள் வாழ்ந்தவரும் இல்லை 30 ஆண்டுகள் கெட்டவரும் இல்லை என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தனர். உங்களுக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு யோகமான காலம் இப்போது வந்திருக்கிறது. தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். நோய், நொடி, வம்பு, வழக்கு பிரச்னைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். புதிய சொத்து சேரும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். ஆரோக்கியமாக நடைபோடக்கூடிய நிலை உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு கடந்த கால நெருக்கடிகள் விலகி யோகமான நிலை ஏற்படும். பெண்களுக்கு செல்வாக்கு உயரும். மாணவர்கள் உயர் கல்விக்காக எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.

சந்திராஷ்டமம்: மே 10.

அதிர்ஷ்ட நாள்: ஏப். 20, 21, 29, 30. மே 2, 3, 11, 12.


பரிகாரம்: சங்கர நாராயணரை வழிபட நன்மைகள் நடந்தேறும்.


பூசம்

எடுத்த வேலைகளை முடிக்கும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். இதுவரை இருந்த மந்தநிலை மாறும். திக்குத்தெரியாத காட்டில் தவித்து வந்ததுபோல் சங்கடப்பட்டு வந்தவர்களுக்கு சரியான பாதைத்தெரியும். முதலீட்டிற்கேற்ற லாபம் இல்லை என்று சங்கடப்பட்டு வந்த நிலை மாறும். உங்கள் செல்வாக்கு உயரும். செய்துவருகின்ற தொழில் முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். வரவேண்டிய பணம் வரும். இந்த நேரத்தில் உங்கள் தன குடும்பாதிபதியான சூரியன் ஜீவன ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிப்பதால் அரசுவழி முயற்சிகள் வெற்றியாகும். கேட்பாரற்று கிடந்த உங்கள் மனு உயிர்பெறும். உங்கள் கோரிக்கைகள் வெற்றியாகும். வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு எதிர்பார்த்த தகவல்வரும். புதிய தொழில் தொடங்க முயற்சிப்பவர்களுக்கு அதற்குரிய அனுமதிகள் கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதிகளுக்குள் புரிதல் உண்டாகும். பொறுப்பு வரும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். செல்வாக்கோடு நடைபோடக்கூடிய நிலை உண்டாகும். மாணவர்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். படிப்புதான் வாழ்க்கையின் அடிப்படை என்ற எண்ணம் உண்டாகும். உயர்கல்வி முயற்சி வெற்றியாகும்.

சந்திராஷ்டமம்: ஏப். 14. மே 10, 11.

அதிர்ஷ்ட நாள்: ஏப். 17, 20, 26, 29. மே 2, 8.


பரிகாரம்: பைரவரை வழிபட சங்கடங்கள் விலகும். கோரிக்கை வெற்றியடையும்.


ஆயில்யம்

திட்டமிட்டு செயல்பட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் முன்னேற்றமான மாதமாகும். உங்கள் சகாய ஸ்தானாதிபதி புதன் பகவான் ஏப். 23 முதல் ஜீவன ஸ்தானத்தில், உச்ச சூரியனுடன் சஞ்சரிப்பதால் நீண்டநாள் கனவுகள் நனவாகும். வரவேண்டிய பணம்வரும். வியாபாரிகள், கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய சொத்து, வாகனம் வாங்கக்கூடிய அளவிற்கு சிலருக்கு வசதி வாய்ப்பு இருக்கும். விரய ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரித்தாலும் அவருடைய பார்வைகள் 4,6,8 ம் இடங்களுக்கு உண்டாவதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். கணவன் மனைவிக்குள் அனுசரித்துச் செல்லக்கூடிய மனநிலை உருவாகும். தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்ப்பு வம்பு வழக்கு என்ற நிலைகள் மாறும். உடல்நிலை சீராகும். தொழில் செய்துவரும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். மருத்துவச்செலவுகள் குறையும். ஆரோக்யம் மேம்படும். மறைக்கப்பட்ட உங்கள் செல்வாக்கு வெளிப்படும். அரசியல் வாதிகளுக்கு ஏற்பட்ட அவமானங்கள், சங்கடங்கள், இழப்புகள் எல்லாம் மாறும். மீண்டும் தொண்டர்கள் பலத்துடனும் தலைமையின் ஆதரவுடனும் செல்வாக்கோடு நடைபோடுவீர்கள். சிலர் சட்டமன்றத்திற்கும் செல்வீர்கள். ஏப். 20 முதல் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் வீண் செலவுகள் குறையும். வருமானத்திற்குரிய வழிகள் தெரியும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். பொன் பொருள் சேரும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம். கூடும். விரும்பிய கல்லுாரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: ஏப். 14, 15. மே 11. 12.

அதிர்ஷ்ட நாள்: ஏப். 20, 23, 29. மே 2, 5, 14.


பரிகாரம்: லட்சுமி நாராயணரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.

 
மேலும் சித்திரை ராசி பலன் ((14.4.2026 முதல் 14.5.2026 வரை) »
temple news
மேஷம்அசுவினிநேர்மையாக வாழ்ந்துவரும் உங்களுக்கு, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் மோட்சக்காரகன் கேது, பூர்வ ... மேலும்
 
temple news
ரிஷபம்கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்எடுத்த வேலைகளை முடிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மிதுனம்மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை ... மேலும்
 
temple news
சிம்மம்மகம்விடாமுயற்சி செய்பவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் வெற்றி தரும் மாதமாக இருக்கும். ... மேலும்
 
temple news
கன்னிஉத்திரம் 2, 3, 4 ம் பாதம்நினைத்ததை முடிப்பதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar