Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனம் : பங்குனி ராசி பலன் ரிஷபம் : சித்திரை ராசி பலன் ரிஷபம் : சித்திரை ராசி பலன்
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் ((14.4.2026 முதல் 14.5.2026 வரை)
மேஷம்: சித்திரை ராசி பலன்
எழுத்தின் அளவு:
மேஷம்: சித்திரை ராசி பலன்

பதிவு செய்த நாள்

10 ஏப்
2026
12:04

மேஷம்


அசுவினி

நேர்மையாக வாழ்ந்துவரும் உங்களுக்கு, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் மோட்சக்காரகன் கேது, பூர்வ புண்ணியாதிபதி சூரியன் ராசிக்குள் சஞ்சரிப்பதால் குழப்பம் எல்லாம் போகும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். விரய ஸ்தானத்தில் சனி பகவானும், மே 10 வரை செவ்வாயும் சஞ்சரிப்பதால் வீண் அலைச்சல் அதிக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு வேலைபளு கூடும். சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படும். உடல் நிலையில் ஒன்று போய் ஒன்று என்று ஏதாகிலும் சங்கடங்கள் வந்துபோகும். மருத்துவ செலவு கூடும். வியாபாரிகளுக்கு பயணங்கள் அதிகரிக்கும், கொள்முதல் செய்வதற்காக பணம் எடுத்துச்செல்பவர்கள் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம். அறிமுகம் இல்லாதவர்களிடம் பேச்சு வார்த்தைகள் வேண்டாம். சிலர் வேலைக்காக வெளிநாடு செல்வீர்கள். வெளிநாட்டில் வேலைப் பார்த்து வருபவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் என்று வாங்குவதால் கையிருப்பு கரையும். அதே நேரத்தில் குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் அனுசரித்துச்செல்வீர்கள். விவசாயிகளுக்கு உழைப்பு அதிகரிக்கும். உழைப்பிற்கேற்ற ஆதாயம் இல்லை என்ற வருத்தம் மேலோங்கும். மாணவர்களுக்கு விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: மே 3.

அதிர்ஷ்ட நாள்: ஏப். 16, 18, 25, 27. மே 7, 9.

பரிகாரம் கற்பக விநாயகரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.


பரணி

எடுத்த வேலையை முடிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் சிறப்பான மாதமாகும். ஏப். 20 வரை ஜென்ம ராசிக்குள்ளும், அதன்பிறகு தன குடும்ப ஸ்தானத்தில் ஆட்சியாகவும் சஞ்சரிக்கும் சுக்கிரன் பணப்புழக்கத்தை அதிகரிப்பார். பொருளாதார நிலையை உயர்த்துவார், தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலையை ஏற்படுத்துவார். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வைகள் 7,9,11 ம் இடங்களுக்கு கிடைப்பதால் திருமண வயதினருக்கு வரன் வரும். சண்டை சச்சரவுகளால் பிரிந்திருந்த தம்பதிகள் பெரியோர் அறிவுரையால் மீண்டும் ஒன்றிணையும் நிலை உருவாகும். கூட்டுத்தொழில் முன்னேற்றமடையும். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சிலர் புதிய இடம், வீடு வாங்குவீர்கள். புதிய வீட்டில் பால் காய்ச்சி குடியேறக்கூடிய நிலையும் சிலருக்கு உண்டாகும். விஐபிகள் ஆதரவால் இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். விரய ஸ்தானத்தில் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல்நிலையில் கவனமாக இருப்பது நன்மையாகும். வேலையின் காரணமாக வெளியூர் பயணமும் அலைச்சலும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் நெருக்கடி அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் திட்டமிட்டு செயல்படுவது நன்மையளிக்கும். விவசாயிகளுக்கு செலவு அதிகரிக்கும். மாணவர்களுக்கு உயர் கல்வி கனவு நனவாகும்.

சந்திராஷ்டமம்: மே 4.

அதிர்ஷ்ட நாள்: ஏப். 15, 18, 24, 27. மே 6, 9.

பரிகாரம்

திருச்செந்துார் முருகனை வழிபட உங்கள் முயற்சி வெற்றியாகும்.


கார்த்திகை 1 ம் பாதம்

உச்சத்தை எட்டிவிடவேண்டும் என வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் ராசிக்குள் மாதம் முழுவதும் சூரியன் உச்சமாக சஞ்சரிப்பதால் உங்களுக்குள் புதுப்புது திட்டங்கள் உருவாகும். தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்தவர்கள் வேலையை விட்டுவிட்டு சுயமாக தொழில் தொடங்க முயற்சிப்பீர்கள். சிலர் வேறு வேலைக்கு முயற்சிப்பீர்கள். சிலர் வெளிநாடு செல்லும் முடிவிற்கும் வருவீர்கள். இந்த நேரத்தில் விரய ஸ்தானத்தில் சனியும், மே 10 வரை ராசிநாதன் செவ்வாயும் சஞ்சரிப்பதால் செலவும், அலைச்சலும் அதிகரிக்கும். என்றாலும் லாப ஸ்தானத்தில் குருப்பார்வையுடன் யோகக்காரகன் ராகு சஞ்சரிப்பதால் வரவேண்டிய பணம் வரும். எடுக்கும் வேலைகளில் லாபம் கூடுதலாகும். செல்வம், செல்வாக்கு, அந்தஸ்து உயரும். திருமண வாழ்க்கையில் முறிவு ஏற்பட்டவர்களுக்கும், வாழ்க்கைத்துணையை இழந்தவர்களுக்கும் மறுமணத்திற்குரிய வாய்ப்புகள் வரும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் கனவு நனவாகும். பெண்களுக்கு குடும்பத்தில் பொறுப்பு அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பணியாளர்களுக்கு வேலைப்பளு கூடும். சிலருக்கு புதிய பொறுப்பு வரும். அரசியல் வாதிகள் தங்களுடைய செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்வதற்காக அதிகமாக உழைப்பீர்கள். அதனால் சிலருக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். வயதானவர்கள் முடிந்தவரை அலைச்சலை குறைத்துக்கொள்வது நன்மையாகும். மாணவர்களுக்கு விரும்பிய கல்லுாரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: மே 5

அதிர்ஷ்ட நாள்: ஏப். 18, 19, 27,28. மே 1, 9, 10.

பரிகாரம்

அதிகாலையில் சூரியனை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

 
மேலும் சித்திரை ராசி பலன் ((14.4.2026 முதல் 14.5.2026 வரை) »
temple news
ரிஷபம்கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்எடுத்த வேலைகளை முடிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மிதுனம்மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை ... மேலும்
 
temple news
கடகம்புனர்பூசம் 4 ம் பாதம்எதிலும் தெளிவாக செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்மகம்விடாமுயற்சி செய்பவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் வெற்றி தரும் மாதமாக இருக்கும். ... மேலும்
 
temple news
கன்னிஉத்திரம் 2, 3, 4 ம் பாதம்நினைத்ததை முடிப்பதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar