Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ... துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) வீடு கட்டும் யோகம் துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) ...
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) போட்டியில் வெற்றி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கன்னி: (உத்திரம் 2,3,4  அஸ்தம், சித்திரை 1,2) போட்டியில் வெற்றி

பதிவு செய்த நாள்

13 டிச
2019
05:12

கள்ளம் கபடமற்ற கன்னி ராசி அன்பர்களே!

முக்கிய கிரகங்களில் சுக்கிரன் தொடர்ந்து நன்மை தருவதால் இந்த மாதம்  சிறப்பாக அமையும். புதன் டிச.21 முதல் ஜன.7 வரையும், செவ்வாய் டிச.28க்கு  பிறகும் நன்மை தருவர். மனதில் பக்தி உயர்வு மேம்படும். எடுத்த முயற்சி  அனைத்திலும் வெற்றி காணலாம். பொருளாதார வளம் மேம்படும். சகோதரிகள்  மிக உறுதுணையாக இருப்பர். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். ஆடை,  ஆபரணம் சேரும். வீடு, மனை, வாகனம் வாங்க யோகமுண்டு.  

சுக்கிரனால் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள்  உதவிகரமாக இருப்பர். டிச.21க்கு பிறகு  குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.  அண்டை வீட்டாரின் தொல்லை மறையும். கணவன், மனைவி இடையே அன்பு  மேலோங்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்.  ஜன.7க்கு  பிறகு அலைச்சல் அதிகரிக்கும். சிலர் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை  உருவாகும்.

பெண்களால் குடும்பம் சிறந்த நிலையை அடையும். புனித தலங்களுக்கு செல்ல  வாய்ப்ப்புண்டு. தோழிகள் உதவிகரமாக இருப்பர். அவர்களால் பண உதவி  கிடைக்கும். கணவரிடத்தில் அன்பு அதிகரிக்கும். குடும்பத்தினர் மத்தியில்  செல்வாக்கு உயரும். வேலைக்கு செல்லும் பெண்கள் பதவி உயர்வு காண்பர்.  டிச.28 க்கு பிறகு பெண் காவலர்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். உடல்நிலை  திருப்தியளிக்கும். கேதுவால் வயிறு பிரச்னை வரலாம்.

சிறப்பான பலன்கள்

* தொழிலதிபர்களுக்கு பகைவர் தொல்லை, அரசு வகையில் இருந்த  அனுகூலமற்ற போக்கு டிச.21க்கு பிறகு மறையும்.
* வியாபாரிகளில் ஆன்மிக சம்பந்தப்பட்ட மற்றும் பூஜை பொருள் விற்பவர்கள்  எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபமடைவர்.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் டிச.21க்கு பிறகு புதிய பதவியை  எதிர்பார்க்கலாம். விண்ணப்பித்த கோரிக்கைகள் நிறைவேறும். மேலதிகாரிகள்  அனுசரணையுடன் இருப்பர்.
* ஐ.டி., துறையினருக்கு நல்ல பெயரும். மதிப்பும் உயரும். வேலையில் திருப்தி  காண்பர்.
* வக்கீல்களுக்கு வழக்கு, விவகாரங்களில் முடிவு சாதகமாக அமையும். சக  வக்கீல்களின் மத்தியில் செல்வாக்கு உயரும்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் டிச.28க்கு பிறகு சிறப்பான நிலையில்  இருப்பர். வேலைப்பளு குறையும். சகஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர்.
* அரசியல்வாதிகளுக்கு  டிச.28க்கு பிறகு எதிர்பார்த்த பதவி வந்து சேரும்.   
* பொதுநல சேவகர்கள்  வளர்ச்சி யடைவர்.  நற்பெயருக்கும் புகழுக்கும் பங்கம்  வராது.
* கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் மூலம் ஆதாயம் அடைவர். அரசு வகையில்  பரிசு, பாராட்டு கிடைக்க வாய்ப்புண்டு.  
* விவசாயிகள் டிச.21க்கு பிறகு அதிக வருமானம் காண்பர். புதிய சொத்து  வாங்கலாம். பக்கத்து நிலப்பிரச்னையில் நல்ல முடிவு கிடைக்கும். பால்பண்ணை  தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும்.
* பள்ளி மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். அன்றாடம்  படிக்கும் நேரத்தை அதிகப்படுத்தினால் அது தேர்வு நேரத்தில் உங்களுக்கு  கைகொடுக்கும்.

சுமாரான பலன்கள்

* தொழிலதிபர்கள் தொழில் ரீதியாக அடிக்கடி பயணம் செல்ல நேரிடும். சிலர்  தீயோர் சேர்க்கையால் பணஇழப்பைச்  சந்திக்க நேரிடும் கவனம்.
* வியாபாரிகள் புதிய வியாபார முயற்சியில் ஈடுபட  வேண்டாம்.
* தரகு, கமிஷன் தொழில்புரிவோர் தீவிர முயற்சி எடுத்தால் மட்டுமே ஆதாயம்  கிடைக்கும்.
* அரசு பணியாளர்களுக்கு பொறுமையும், நிதானமும் தேவை. கோரிக்கைகள்  நிறை வேறாமல் போகலாம். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரியலாம்.  * மின்சாரம், நெருப்பு தொடர்பான பணியாளர்களுக்கு கூடுதல் கவனம் தேவை.  பெண்கள் வகையில் தொல்லை ஏற்படலாம்.  சற்று ஒதுங்கி இருக்கவும்.
* மருத்துவர்கள் பணிச்சுமையால் உடல்நலக்குறைவுக்கு ஆளாவர். பணியிடத்தில்  கவனமாக  செயல்படவும்.  
* ஆசிரியர்கள் சக ஊழியர்களின் செயல்பாட்டால் மன உளைச்சலுக்கு  ஆளாகலாம்.
* கல்லூரி மாணவர்கள் வீண் பொழுதுபோக்கை தவிர்க்கவும்.

* நல்ல நாள்:
டிச.19,20,24, 25,30,31, ஜன.1,2,3,9, 10,11,12,13

* கவன நாள்: ஜன.4,5,6 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 4,8
* நிறம்: வெள்ளை, பச்சை.

பரிகாரம்:
●  தினமும் காலை நீராடியதும் சூரிய நமஸ்காரம்
●  வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு வில்வமாலை
●  செவ்வாயன்று முருகப் பெருமானுக்கு அர்ச்சனை

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar