Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேஷம்: சித்திரை ராசி பலன் மிதுனம் : சித்திரை ராசி பலன் மிதுனம் : சித்திரை ராசி பலன்
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் ((14.4.2026 முதல் 14.5.2026 வரை)
ரிஷபம் : சித்திரை ராசி பலன்
எழுத்தின் அளவு:
ரிஷபம் : சித்திரை ராசி பலன்

பதிவு செய்த நாள்

10 ஏப்
2026
12:04

ரிஷபம்


கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்

எடுத்த வேலைகளை முடிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் யோகமான மாதமாகும். உங்களின் சுக ஸ்தானாதிபதி சூரியன் விரய ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிப்பதால் உங்கள் செல்வாக்கு வெளிப்படும். அரசியல்வாதிகள் தங்கள் வேலைகளில் உறுதியாக இருப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையின் காரணமாக அலைச்சல் அதிகரிக்கும். மேல் அதிகாரிகள் உங்களைக் கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள். சிலருக்கு வேலையின் காரணமாக குடும்பத்தினருடன் ஒரு இடைவெளி ஏற்படும். சுக ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் தாயாரின் உடல்நிலையில் சிறு சங்கடம் தோன்றும். தாய்வழி உறவுகளுடன் விரோதம் ஏற்படும். லாப ஸ்தானம் பலமடைந்திருப்பதால் வியாபாரிகளுக்கு முதலீட்டிற்கேற்ற வருமானம் கிடைக்கும். சிறு வியாபாரிகளின் வாழ்வில் வளம் உண்டாகும். மாதம் முழுவதும் ராசிநாதன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரித்தாலும், ஏப். 20 முதல் ராசிக்குள் ஆட்சியாக சஞ்சரிப்பதால் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். சந்தர்ப்ப சூழ்நிலை அறிந்து கணவன் மனைவி இருவரும் விட்டுக்கொடுத்து செயல்படுவீர்கள். பொன் பொருள், ஆடை ஆபரணம், புதிய வாகனம் என்று சிலர் வாங்குவீர்கள். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். நீண்டநாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தவர்களுக்கு ஆரோக்கியம் மேம்படும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். மாணவர்களுக்கு மேற்கல்விக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.

சந்திராஷ்டமம்: மே 5, 6.

அதிர்ஷ்ட நாள்: ஏப். 15, 19, 24, 28. மே 1, 10.


பரிகாரம்: ஐயாறப்பரை வழிபட வாழ்வில். வளம் உண்டாகும்.


ரோகிணி

பலவற்றில் கவனத்தை செலுத்தி வேலைப்பளுவிற்கு ஆளாகிவரும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் முன்னேற்றமான மாதமாகும். தொழில் காரகனான சனி பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இதுவரையில் இருந்த பிரச்னைகள் எல்லாம் விலக ஆரம்பிக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். முதலீட்டிற்கேற்ப ஆதாயம் இல்லை என்று வருத்தப்பட்டு வந்த நிலைமாறும். முடங்கிக்கிடந்த தொழில்கள் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலையில் ஏற்பட்ட தொந்தரவுகள் விலகும். இழுபறியாக இருந்த வழக்குகள் முடிவிற்கு வரும். வேலைக்காக வெளிநாட்டிற்கு செல்ல பலமுறை முயற்சி செய்தும் போகமுடியவில்லை என்ற நிலை மாறும். தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வருபவர்களுக்கு ஆட்குறைப்பு நடவடிக்கையால் வேலைக்கு ஆபத்து வந்து விடுமோ என்று பயந்துக்கொண்டிருந்த நிலை நீங்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல முயற்சி மேற்கொண்டு வருபவர்களுக்கு அரசின் அனுமதிகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். மே 10 வரை செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், புதிய இடம், நிலம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த வரவு வரும். சிலர் சொந்த வீட்டில் பால் காய்ச்சுவீர்கள். சூரியன் விரய ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிப்பதால் செலவுகள் அதிகரிக்கும். அது உங்கள் வாழ்க்கைக்கும் வளர்ச்சிக்குமானதாக இருக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும், எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும், ஆரோக்கியம் மேம்படும். மாணவர்களுக்கு எதிர்காலத்தின் மீது அக்கறை உண்டாகும். உயர்கல்வி கனவு நனவாகும்.

சந்திராஷ்டமம்: மே 6, 7.

அதிர்ஷ்ட நாள்: ஏப். 15, 20, 24, 29. மே 2, 11.


பரிகாரம்: வீர ராகவப் பெருமாளை வழிபட வாழ்வில் வெற்றி உண்டாகும்.


மிருகசீரிடம் 1, 2 ம் பாதம்

எந்த நிலையிலும் தைரியத்தை இழக்காத உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். தைரிய வீரியக்காரகனான செவ்வாய் மே 10 வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பம், தொழில் உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். சிலருக்கு புதிய சொத்துகள் சேரும். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் குடும்பத்தில் நிம்மதியை ஏற்படுத்துவார். கொடுத்த வாக்கை காப்பாற்றும் நிலையை உங்களுக்கு வழங்குவார். 6, 8, 10 ம் இடங்களைப் பார்க்கும் குருவால் மறைந்திருந்த உங்கள் செல்வாக்கு வெளிப்படும். நேற்றுவரை எதற்காகவோ பயந்து பயந்து வாழ்ந்துவந்த உங்கள் நிலையில் இனி எந்த ஒரு பயமும் இருக்காது. நினைத்ததை சாதிக்கும் அளவிற்கு உங்கள் நிலை மாறும். எதிர்ப்பு, வம்பு, வழக்கு என்பதெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்க முயற்சி மேற்கொண்டு வருபவர்களுக்கு அதற்குரிய வாய்ப்புகள் அமையும். ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் லாபம் தரும். ஜீவன காரகன் சனிபகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இனி நீங்கள் எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கைக்கு வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி கனவு நனவாகும்.

சந்திராஷ்டமம்: மே 7.

அதிர்ஷ்ட நாள்: ஏப். 15, 18, 24, 27. மே 6, 9.


பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபட சங்கடங்கள் யாவும் விலகும்.

 
மேலும் சித்திரை ராசி பலன் ((14.4.2026 முதல் 14.5.2026 வரை) »
temple news
மேஷம்அசுவினிநேர்மையாக வாழ்ந்துவரும் உங்களுக்கு, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் மோட்சக்காரகன் கேது, பூர்வ ... மேலும்
 
temple news
மிதுனம்மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை ... மேலும்
 
temple news
கடகம்புனர்பூசம் 4 ம் பாதம்எதிலும் தெளிவாக செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்மகம்விடாமுயற்சி செய்பவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் வெற்றி தரும் மாதமாக இருக்கும். ... மேலும்
 
temple news
கன்னிஉத்திரம் 2, 3, 4 ம் பாதம்நினைத்ததை முடிப்பதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar