பதிவு செய்த நாள்
13
டிச
2019
05:12
தன்னலம் கருதாமல் பாடுபடும் தனுசு ராசி அன்பர்களே!
இந்த மாதம் 11ம் இடத்தில் இருக்கும் செவ்வாய் டிச.28வரை நற்பலன் கொடுப்பார். மேலும் சுக்கிரனால் மாதம் முழுவதும் நன்மை கிடைக்கும். பெண்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். அவர்களால் பொன், பொருள் சேரும். விருந்து, விழா என அடிக்கடி செல்வீர்கள். பொருளாதார வளம் சிறக்கும். அரசு வகையில் ஆதாயம், அனுகூலம் ஏற்படும். சனியின் 3ம் இடத்துப் பார்வை சிறப்பாக உள்ளதால் காரிய அனுகூலம், பொருளாதார வளம், தொழில் விருத்தி ஏற்படும்.
செவ்வாயால் மாத முற்பகுதியில் வீடு,மனை,வாகனம் வாங்க யோகமுண்டாகும். சூரியனால் அலைச்சலும், சோர்வும் ஏற்படும். சமூக மதிப்பு எதிர்பார்த்தபடி இருக்காது. புதனால் ஜன.7 வரை குடும்பத்தில் பிரச்னை, உறவினருடன் கருத்துவேறுபாடு ஏற்படலாம். ஆனால் அதன் பிறகு நிலைமை சீராகும்.
உங்கள் செல்வாக்குக்கு பாதிப்பு ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். சிலருக்கு வீண் மனக்கவலை வரலாம். உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். எனவே சற்று ஒதுங்கி இருக்க வேண்டும்.
பெண்களால் குடும்பத்தில் வளர்ச்சி உண்டாகும். அவர்களின் செயல்பாடு கண்டு குடும்பத்தினர் பெருமிதம் காண்பர். சகோதரிகளால் பண உதவி கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். பெண் காவலர்கள் சிறப்பான பலன் பெறுவர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை டிச.28க்குள் கேட்டு பெறவும்.
உடல்நிலை சுமாராக இருக்கும். வீண்அலைச்சலும், சோர்வும் ஏற்படும். டிச.28க்கு பிறகு செவ்வாயால் பித்தம், மயக்கம் போன்ற உபாதை வரலாம்.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்கள் தொழில் ரீதியான பயணம் சென்று வெற்றியுடன் திரும்புவர்.
* வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். வியாபார விரிவாக்க நோக்கில் விண்ணப்பித்த வங்கிக்கடன் எளிதாக கிடைக்கும்.
* அரசு வகையில் ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
* அரசு வேலையில் இருப்பவர்கள் சிலர் உயர் பதவி கிடைக்கப் பெறுவர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.
* போலீஸ், ராணுவத்தில் பணி புரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். அவர்கள் தங்களின் கோரிக்கைகளை டிச.28க்குள் கேட்டு பெறவும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.
* அரசியல்வாதிகள் மாத முற்பகுதியில் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். தொண்டர்களின் செயல்பாடு பெருமை சேர்க்கும்.
* பொதுநல சேவகர்கள் நற்பலனை எதிர்பார்க்கலாம். சமூகத்தில் புகழ், கவுரவம் மேலோங்கும்.
* கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். போதிய வருமானம் இருக்கும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும்.
* விவசாயிகள் காய்கறி, கீரைகள், பழ வகைகள் மூலம் அதிக மகசூலைக் காணலாம். புதிய சொத்து வாங்க வாய்ப்புண்டு.
சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்கள் அடிக்கடி பயணம் செல்வதால் உடல் நலக்குறைவுக்கு ஆளாவர். சிலர் தீயோர் சேர்க்கையால் அவதியுறுவர்.
* தனியார் துறையில் பணி புரிபவர்கள் வேலைப்பளுவால் சிரமப்படுவர். அதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும்.
* மின்சாரம், நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் விழிப்புடன் செயல்படவும்.
* ஐ.டி., துறையினர் வேலையில் கூடுதல் கவனம் செலுத்தவும். கோரிக்கைகள் நிறைவேறாமல் போகலாம். சிலர் திடீர் இடமாற்றத்தை சந்திக்கலாம்.
* மருத்துவர் சிலருக்கு இடமாற்றம் உண்டாகும்.ஆனால் அது சிரமம் அளித்தாலும், எதிர்காலத்தில் நன்மை தருவதாக அமையும்.
* வக்கீல்களுக்கு சுறுசுறுப்பு அற்ற நிலை, இருப்பிட மாற்றம் ஏற்படலாம்.
* ஆசிரியர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். திடீர் இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.
* விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பின் மூலம் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. வழக்கு, விவகாரங்களில் முடிவு சுமாராக இருக்கும். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.
* பள்ளி, கல்லூரி மாணவர் களுக்கு அலட்சிய எண்ணம் கூடாது. அக்கறையுடன் படிக்கவும்.
* நல்ல நாள்:
டிச.19,20,21, 22,23,26,27,30,31, ஜன.1,7,8,9,10
* கவன நாள்: ஜன.11,12,13 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 3,7
* நிறம்: வெள்ளை, சிவப்பு
பரிகாரம்
● சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு எள் தீபம்
● வியாழனன்று தட்சணாமூர்த்திக்கு வில்வமாலை
● சுவாதியன்று லட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை