Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) ... கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) அந்தஸ்து உயரும் கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ...
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) எதிர்பாராத வருமானம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) எதிர்பாராத வருமானம்

பதிவு செய்த நாள்

13 டிச
2019
05:12

பெருந்தன்மையுடன் செயல்படும் மகர ராசி அன்பர்களே!

இந்த மாதம்  செவ்வாய் டிச.28ல் விருச்சிக ராசிக்கு வருகிறார். இதனால்  நற்பலன் அதிகரிக்கும். புதன் டிச.21 வரை சாதகமான இடத்தில் இருந்து நற்பலன்  தருவார். மேலும் சுக்கிரன், ராகு மாதம் முழுவதும் நன்மை அளிப்பர். பெண்களால்  முன்னேற்றம் காண்பீர்கள். அவர்களால் பொன், பொருள் சேரும். விருந்து, விழா  என அடிக்கடி செல்வீர்கள். ராகு நல்ல பொருளாதார வளத்தைக் கொடுப்பார்.  பகைவரை எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். முயற்சியில் வெற்றியை  தருவார். உங்கள் ஆற்றல் மேம்படும்.

புதனால் மாதத் தொடக்கத்தில் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய முயற்சி  வெற்றி பெறும். குடும்பத்தில் தம்பதி ஒற்றுமை மேலோங்கும். கணவன், மனைவி  இடையே அன்பு பெருகும். டிச.28க்கு பிறகு புதிய வீடு, மனை, வாகனம் வாங்க  யோகம் கூடி வரும். ஆடம்பர பொருட்களை வாங்க வாய்ப்புண்டு. சகோதரிகள்  உதவிகரமாக இருப்பர். ஜன.7க்கு பிறகு வீட்டினுள் பிரச்னை ஏற்படலாம்.  உறவினர் வகையில் கருத்துவேறுபாடு உருவாகலாம். சிலருக்கு பண இழப்பும்  ஏற்படலாம்.

பெண்கள் வாழ்வில் சிறப்படைவர்.  கணவர் மற்றும் குடும்பத்தாரின் நன்மதிப்பை  பெறுவர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். டிச.21க்கு  பிறகு எதிலும் பொறுமை தேவை. விட்டுக் கொடுத்து செயல்படவும். டிச.28க்கு  பிறகு வியாபாரம் செய்யும் பெண்கள் அதிக வருமானம் காண்பர். உஷ்ணம்,  தோல் தொடர்பான நோய்கள் டிச.28க்கு பிறகு பூரண குணம் அடையும்.

சிறப்பான பலன்கள்

* தொழிலதிபர்கள் வெளியூர் பயணத்தை முடித்து ஆதாயத்துடன் திரும்புவர்.  புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
* வியாபாரிகள், பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய  பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள்.
* அரசு பணியாளர்கள் சீரான வளர்ச்சி காண்பர். வேலைப்பளு  இருந்தாலும்மனதில் நிம்மதி இருக்கும்.
* போலீஸ், ராணுவத்தினருக்கு மாத பிற்பகுதியில் முயற்சியில் வெற்றி  கிடைக்கும்.வேலையால் மனதில் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். சிலர்  பதவி உயர்வு காண்பர்.
* தனியார் துறையில் பணிபுரிவோர் மாதத் தொடக்கத்தில் சிறப்பான  முன்னேற்றம் காண்பர்.  எதிர்பாராத நன்மை கிடைக்கும்.
* ஐ.டி., துறையினருக்கு சக பெண்  ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர்.  வழக்கமான சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கு தடையிருக்காது.
* வக்கீல்களுக்கு டிச.21 வரை தாங்கள் நடத்தும் வழக்குகளில் முடிவு சாதகமாக  இருக்கும்.
* ஆசிரியர்களுக்கு மாதத் தொடக்கத்தில் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.  கோரிக்கைகள் ஓரளவுநிறைவேறும்.
* அரசியல்வாதிகள் டிச.28க்கு பிறகு முன்னேற்றம் காணலாம். உங்கள்  வளர்ச்சிக்கு பெண் பின்னணியாக இருப்பார்.
* பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த நன்மை கிடைக்கப் பெறுவர்.
* கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் மூலம் ஆதாயம் அடைவர். பணவரவும்  இருக்கும். மக்கள் மத்தியில் புகழ், பாராட்டு கிடைக்க பெறலாம்.
* விவசாயிகளுக்கு பழ வகைகள் மூலம் வருமானம் அதிகரிக்கும். சிலர் நவீன  விவசாயத்தை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பர். டிச.28க்கு புதிய சொத்து  வாங்கும் எண்ணம் கைகூடும்.
* பள்ளி மாணவர்கள் ஆசிரியரின் அறிவுரைகளை ஏற்று கல்வியில் வளர்ச்சி  காண்பர்.

சுமாரான பலன்கள்

* தொழிலதிபர்களுக்கு வீண் விரயம் உருவாகலாம் அல்லது திடீர் செலவு  ஏற்படலாம்.  எனவே பணவிஷயத்தில் கவனம் தேவை. எதிரிகளால்  மறைமுகத்தொல்லை வரலாம்.
* தனியார் துறையில் பணி புரிவோருக்கு டிச.21க்கு பிறகு வேலைப்பளு  அதிகரித்தாலும் அதற்குரிய வருமானம் கிடைக்கும்.
* மருத்துவர்களுக்கு பணவிரயம் ஏற்படலாம். சிலருக்கு இடமாற்றம் ஏற்பட   வாய்ப்புண்டு.
* வக்கீல்களுக்கு அலைச்சலால் உடல்நிலை பாதிக்கப்படும்.  சிலருக்கு  வெளியூரில் தங்கும் சூழ்நிலை உருவாகலாம்.
* விவசாயிகளுக்கு டிச.21க்கு பிறகு கால்நடை வகையில் எதிர்பார்த்த ஆதாயம்  கிடைக்காது.
* கல்லூரி மாணவர்கள் சிரத்தை எடுத்து படிப்பது அவசியம். விடாமுயற்சி  தேவை.

* நல்ல நாள்:
டிச.21,22,23, 24,25,28,29, ஜன.2,3,9, 10,11,12,13

* கவன நாள்: டிச.17,18, ஜன.14 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 6,7
* நிறம்: வெள்ளை, நீலம்.

பரிகாரம்
●  காலை தினமும் நீராடியதும் சூரிய தரிசனம்
●  சனிக்கிழமைகளில் சனீஸ்வரருக்கு எள் தீபம்
●  மூல நட்சத்திரத்தன்று ஆஞ்சநேயர் வழிபாடு

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar