புளைலிப்னு இயால் என்னும் திருடன் ஒரு கட்டத்தில் பெரியவர் ஒருவரின் வழிகாட்டுதலால் திருந்தினான். ""இயால்! நீ யாரிடம் திருடினாயோ அவர்களிடம் பணத்தை திரும்பக் கொடுத்தால் உன் பாவம் மன்னிக்கப்படும்” என்றார் பெரியவர். ஆனால் அவன் திருடிய செல்வத்தை எல்லாம் இழந்து விட்டதால் உரியவர்களிடம் மன்னிப்பு கேட்டான். அதில் ஒருவர் மட்டும், ""திருடியதில் சிறிதளவாவது பணம் கொடுத்தால் மட்டுமே என்னால் மன்னிக்க முடியும்” என்றார். ""ஐயா! மனம் திருந்திய என்னிடம் பணம் ஏதுமில்லையே” என வருந்தினான் இயால். ""அப்படியானால் ஒரு பிடி மண்ணையாவது எடுத்து என் சட்டைப்பையில் போடும்” என்றார் அவர். என்ன ஆச்சரியம் இயால் போட்ட மண்துகள் ஒவ்வொன்றும் பொன்துகளாக மாறியது. அதைக் கண்ட நபர், ""என்ன அதிசயம். உமது பாவமன்னிப்பு இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டதால் தான் இந்த அதிசயம் நிகழ்ந்தது” என்றார்.