பைசா செலவில் லாமல் எல்லா யாகங் களையும் நடத்திய பலனை அடையலாம். எப்படி? திருப்பாவை என்பதே ஒரு யாகம். வேதத்தின் சாரத்தையே திருப்பாவையாக்கி தந்திருக் கிறாள் ஆண்டாள். ஒருவர் அஸ்வமேத யாகம் செய்தால் அதற்குரிய பலன் கிடைக்கும். மழைக்குரிய யாகம் செய்தால் மழை பெய்யும். புத்திர காமேஷ்டி நடத்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருப்பாவையின் முப்பது பாடல்களையும் பாடினால், எல்லா யாகமும் செய்த பலன் கிடைக்கும். ஏனெனில் எல்லா யாகத்திற்கு உரிய மந்திரத்தின் உட்பொருளும் இதில் அடங்கியிருக்கிறது.