ஆறறிவு படைத்த மனிதன் வயிறு வளர்ப்பதற்காக மட்டும் வாழக் கூடாது. உலகை ஆளும் சிவபெருமானை சிந்திப்பதே மனிதனாகப் பிறந்ததன் பயன் என்கிறார் மாணிக்க வாசகர். ""சிந்தித்தால் சிவனை மட்டுமே சிந்திக்கிறேன். காண்பதாக இருந்தால் அவனது திருவடி தாமரைகளையே காண்கிறேன். எப்போதும் அவனது பெருமைகளை மட்டுமே பேசுகிறேன்” என்று திருவாசகத்தில் கூறியுள்ளார். சிவனை போற்றும் விதமாக "பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து எனச் சொல்கிறார். குழந்தைக்கு பசிக்குமே என நேரம் அறிந்து பாலுாட்டும் தாயை விட நம் மீது அன்பு கொண்டவர் என்பதால் "தாயுமானவர் என்றும் சிவனுக்கு பெயருண்டு.