சபரிமலையில் நாளை மண்டலபூஜை : தங்க அங்கி இன்று வருகை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2019 12:12
சபரிமலை : சபரிமலையில் நாளை(டிச.,27) மண்டலபூஜை நடைபெறுகிறது. ஆரன்முளாவிலிருந்து புறப்பட்ட தங்க அங்கி இன்று மாலை சன்னிதானம் வருகிறது.
மண்டலபூஜை நாளில் மூலவருக்கு அணிவிக்க திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் வழங்கிய தங்க அங்கி 23-ம் தேதி ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலிலிருந்து புறப்பட்டது. இன்று பகல் பம்பை வந்தடைகிறது. மாலை மூன்று மணிக்கு ஐயப்பா சேவா சங்க தொண்டர்கள் மூலம் அங்கி சன்னிதானம் கொண்டு வரப்படும். 6:25 மணிக்கு 18-ம் படி வழியாக சன்னிதானம் வரும் அங்கியை தந்திரி கண்டரருமகஷே் மோகனரரு மேல்சாந்தி சுதிர்நம்பூதிரி ஆகியோர் பெற்றுக்கொள்வர். பின்னர் அங்கியுடன் மூலவருக்கு தீபாராதனை நடைபெறும். நாளை அதிகாலை 3:15 மணிக்கு தொடங்கும் நெய்யபிஷேகம் 9:45மணிக்கு நிறைவு பெறும். 11:40 மணிக்குள் மண்டலபூஜை நடைபெறும். நாளை இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். மகரவிளக்கு காலத்திற்காக 30-ம் தேதி மாலை 5.00 மணிக்கு நடை திறக்கப்படும்.