பதிவு செய்த நாள்
24
ஏப்
2012
05:04
சேலம் ஸ்கந்தாஸ்ரமத்தில் மூலவரின் கருவறையைச் சுற்றிலும் நவக்கிரகங்கள் தங்கள் தேவியருடனும் வாகனங்களுடனும் காட்சி தருகின்றனர். மும்பை செம்பூர் முருகன் கோயிலில் ஆமை வடிவத்திலான பீடத்தில் 12 ராசிகள், சப்த கன்னியர், அஷ்டதிக் கஜங்கள் பொறிக்கப்பட்டு, அவற்றின் மீது நவக்கிரகங்கள் அமையப்பெற்றுள்ளன.
சிவகங்கை குன்றக்குடி சண்முகநாதர் கோயிலில் சண்முகர் தனி மயிலிலும், வள்ளி தெய்வானை தேவியர் தனித்தனி மயில்களில் அமர்ந்து அருள்பாலிப்பது விசேஷம்.
திண்டுக்கல் திருமலைக்கேணி கோயிலில், முருகன் விக்கிரகத்தின் கீழ் ஒரு துவாரம் இருக்கும். அதனுள்ளும் ஒரு தண்டபாணி மூர்த்தம் உள்ளது. அவரை மேலே கொண்டு வந்து பிரதிஷ்டை செய்ய முயன்றபோது, அவரை அகற்ற வேண்டாம், மேலே இன்னொரு மூர்த்தம் வைத்து வழிபடுக; அந்த மூர்த்தத்துக்கான அபிஷேகங்களையே கீழேயுள்ள மூர்த்தமும் ஏற்கும் என வாக்கு வந்ததாம். அப்படியே செய்தனர். எனவே, இங்கு இரண்டு தண்டபாணிகளின் அருட்கடாட்சம் கிடைக்கிறது.