ராம ராஜ்யம், ராமராஜ்யம் என்கிறார்களே அப்படிப்பட்ட ராமர் இருந்த காலத்தில் நாம் இல்லையே என்று எல்லாரும் நினைக்கிறார்கள். எனக்கு நல்ல வேளையாக ராமர் காலத்தில் நாம் பிறக்கவில்லையே என்று சந்தோஷமாகத்தானிருக்கு. ஏனென்றால் ராமர் மனிதனாகத் தன்னை குறைத்துக் கொண்டு க்ஷத்ரிய தர்மங்களையெல்லாம் சாஸ்திரப்படி நடத்திக்காட்டியவர். அவர் காலத்தில் என்னை மாதிரி ஒரு சந்நியாசியை - மடாதிபதியைப் பார்த்தால் என்ன செய்திருப்பார்? அவரே ஓடிவந்து நமஸ்காரம் பண்ணியிருப்பார். இதை விட ஒரு கஷ்டம் உண்டா? இப்பொழுது பிறந்திருப்பதால்தான் அவருக்கு நமஸ்காரம் பண்ணுகிற பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது.