Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலகளந்த பெருமாள் கோவிலில் பகல்பத்து ... மார்கழி 16ம் நாள் வழிபாடு: நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய.. மார்கழி 16ம் நாள் வழிபாடு: நாயகனாய் ...
முதல் பக்கம் » சிறப்பு செய்திகள்
மார்கழி 15ம் நாள் வழிபாடு.. எல்லே இளங்கிளியே
எழுத்தின் அளவு:
மார்கழி 15ம் நாள் வழிபாடு.. எல்லே இளங்கிளியே

பதிவு செய்த நாள்

30 டிச
2019
12:12

கோவை - சிறுவாணி சாலையில், சென்னனுார் கிராமத்திலுள்ள, ஸ்ரீதேவி பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில், நாளை காலை, 5:00 மணிக்கு திருப்பாவையின், 15ம் பாடலை, பக்தர்கள் பாராயணம் செய்கின்றனர்.கோவிலின் சிறப்புசென்னனுார் கரிவரதராஜ பெருமாள் கோவில், 500 ஆண்டுகள் பழமையானது.

இக்கோவிலில் வீற்றிருக்கும் சுயம்பு மூர்த்தியான கரிவரதராஜ பெருமாளை, நினைத்து மனமுருகி ஆயிரத்து எட்டு முறை ஆழிமழைக்கண்ணா என்று துவங்கும், திருப்பாவையை பாராயணம் செய்து வழிபட்டால், மழை பொழியும் என்பது நம்பிக்கை. வறட்சியின்போது விவசாயிகள் இப்படி வழிபட்டு, மழை பெற்று பயனடைந்ததாக ஐதீகம்.இக்கோவிலில் நாளை, காலை 5:00 மணிக்கு, எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியே என்று துவங்கும், திருப்பாவை பாடலை, பக்தர்கள் பாராயணம் செய்கின்றனர்.பாடலின் பொருள்என்ன இனியும் பொழுது புலரவில்லையா, இனியும் துாங்குகின்றாயா? என்கின்றனர் பெண்கள். சிடு சிடு என பேசாதீர்கள். இதோ வந்து விட்டேன் என்றாள் துாங்கியவள். நீ மகா கெட்டிக் காரி. உன் சொற்படியே நாங்களும் கட்டுக்கதை பேசும் மகாகெட்டிக்காரிளாகவே இருப்போம்.எல்லாரும் வந்து விட்டீர்களா? நீயே எண்ணிப்பார்த்துக்கொள் என்கின்றனர் பெண்கள். இப்போது இவளும் எழுந்துவர, குவலயபீடம் என்னும் யானையின் கொம்பை முறித்துக்கொன்றவனும், எதிரிகளை நேருக்கு நேர் போரிட்டு அழிக்க வல்லவனும், மாயச்செயல்களை செய்வதில் சூரனுமான கண்ணபிரானைப் பாட விரைந்து வா என்கின்றனர் பெண்கள்.

 
மேலும் சிறப்பு செய்திகள் »
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் திருஅத்யயன வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல் பத்து ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி, உடுமலையில் உள்ள பெருமாள் கோவில்களில், நாளை வைகுண்ட ஏகாதசி விழா துவங்குகிறது; 10ம் தேதி ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், வருகிற, 10ம் தேதி வைகுண்ட ஏகாதசி என்னும், சொர்க்கவாசல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar