பதிவு செய்த நாள்
31
டிச
2019
12:12
உக்கடம் கோட்டைமேட்டில் உள்ள, பூமி நீளா நாயகி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில் நாளை காலை, 5:00 மணிக்கு மார்கழி மாதத்தை ஒட்டி, ஆண்டாள் நமக்கு அருளிய திருப்பாவையின், 16ம் பாடலை பக்தர்கள் பாராயணம் செய்கின்றனர்.கோவிலின் சிறப்புபழமையான இக்கோவிலில் அருள்பாலித்து வரும், கரிவரதராஜ பெருமாள் மற்றும் பூவராக பெருமாளை, செவ்வாய்கிழமையில் துவரம்பருப்பு, முழுமுந்திரி, செவ்வரளிப்பூ, எலுமிச்சை ஆகியவற்றை சமர்ப்பித்து வழிபட்டால், நிலம் தொடர்பான பிரச்னை, நிலம் விற்பது, வாங்குவது, சொத்து வில்லங்கங்கள் தீரும். நிலத்தின் ஒரு பிடி மண் எடுத்து வந்தும் வழிபடலாம்.மார்கழி மாதத்தையொட்டி, இக்கோவிலில் நாளை காலை, 5:00 மணிக்கு, நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய... என்று துவங்கும் திருப்பாவை பாடலை, பக்தர்கள் பாராயணம் செய்கின்றனர்.பாடலின் பொருள்இடையர் குலத்துக்கெல்லாம் ஒப்பற்ற நந்த கோபாலனது திருமாளிகையின் வாசலை காத்து நிற்கும் வாயில் காப்போனே...கொடிகள் பறக்கும் தோரணங்கள் கட்டப்பட்ட வாயிலின் காவலனே... மணிகள் ஒலிக்கும் மணிக்கதவின் தாளை திறப்பாய்.பலவித மாயச் செயல்களைச் செய்பவனும், நீல நிற கண்களையும் உடைய கண்ணன், இடைக்குலச் சிறுமியரான எங்களுக்கு, நோன்புக்குரிய பரிசு தருவதாக நேற்றே வாக்களித்துள்ளான்.ஆதலால், அவனை மனத்துாய்மை, உடல் துாய்மை உடையவராய் வந்து அவள் உறக்கம் நீங்கி எழுந்தருள, திருப்பள்ளி எழுச்சி பாட வந்துள்ளோம். நீ மறுக்காது, கதவை திறப்பாய் என வாயில் காப்போனை வேண்டுகின்றனர் ஆயர் பாடிச் சிறுமிகள் என்பதே இப்பாடலின் பொருள்.