பதிவு செய்த நாள்
08
ஜன
2020
10:01
திருக்கோவிலுார்:திருக்கோவிலுார், மணம் பூண்டி, ஸ்ரீரகூத்தம தீர்த்த சுவாமிகளின் 447வது ஆண்டு ஆராதனை விழாவை முன்னிட்டு மூல பிருந்தாவனம் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
பாவபோதகர் என போற்றப்பட்டவரும், உத்திராதி மடத்தின் குருவான ஸ்ரீரகூத்தம தீர்த்த சுவாமிகளின் மூல பிருந்தாவனம் திருக்கோவிலுார், மணம்பூண்டி தென்பெண்ணை நதிக்கரையில் உள்ளது. அவரது 447வது ஆண்டு ஆராதனை விழா கடந்த 5ம் தேதி துவங்கியது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு துவங்கிய பாகவத பிரவசனம் நேற்று அதிகாலை 2:00 மணி வரை இடைவிடாது நடந்து கொண்டிருந்தது.
அதிகாலை 5:30 மணிக்கு ராமர் பூஜை, மூல பிருந்தாவனத்திற்கு பஞ்சாமிர்த அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.மாலை 6:00 மணிக்கு வித்வான்களின் உபன்யாசம், இரவு 9:00 மணிக்கு பீடாதிபதி சத்யார்த்தமதீர்த்த சுவாமிகளின் அனுக்கிரக வைபவம் நடந்தது.விழாவின் நிறைவாக இன்று காலை 8:00 மணிக்கு ராமர் பூஜை, மூல பிருந்தாவனத்திற்கு பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பீடாதிபதி உத்தரவின் பேரில், பிருந்தாவன செயலர் ஆனந்த தீர்த்தாசார்ய சிம்மலகி செய்து வருகிறார். பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர்.