திருப்பூர்: அம்மாபாளையத்தில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ காமாட்சியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ கருப்பராயர் கோவில் விழாவில், பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். விழாவில், காலை 7:00 மணிக்கு மாவிளக்கு மற்றும் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில், பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சென்று, கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். விழாவில் மாகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை, அம்மாபாளையம் ஊர் பொது மக்கள் மற்றும் கோவில் விழா குழுவினர் செய்துள்ளனர்.