Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ... கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2)  அபார ஆற்றல் கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) ...
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) வீட்டில் சுபநிகழ்ச்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) வீட்டில் சுபநிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

13 ஜன
2020
05:01

சிம்ம ராசி அன்பர்களே!

இந்த மாதம் சூரியன், குரு, ராகுவால் சிறப்பான பலன் கிடைக்கும். சுக்கிரனால் பிப்.9க்கு பிறகு நன்மை கிடைக்கும். புதன் ஜன.22 வரை 6ம் இடத்தில் இருப்பதால் எடுத்த முயற்சி வெற்றி பெறும். வீட்டில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதே நடந்தேறும். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பிப்.9க்கு பிறகு வசதி வாய்ப்பு பெருகும். பெண்கள் ஆதரவுடன் செயல்படுவர். சூரியனால் பகைவரை வெற்றி கொள்வீர்கள். மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும்.

குருபகவான் பொருளாதார வளத்தை அதிகரிக்கச் செய்வார். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். சிலர் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர். சகோதரிகள் உறுதுணையாக இருப்பர். ஆடம்பர பொருட்கள் வாங்க யோகமுண்டு. கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்கும். ஜன.22க்கு பிறகு குடும்பத்தில் குழப்பம் நிலவும்.  சிறு பிரச்னைகள் ஏற்பட்டு மறையும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும்.

பெண்கள் குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வர். பொன், பொருள் சேரும். மனதில் மகிழ்ச்சி மேலோங்கும். சகோதர வழியில் உதவி கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேறும். சகோதர வழியில் பணஉதவி கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். செவ்வாயால்  வயிறு பிரச்னை வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை. பிப்.9க்கு பிறகு பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.

சிறப்பான பலன்கள்

* தொழிலதிபர்கள் கூடுதல் வளர்ச்சியும், பணவரவும் கிடைக்கப் பெறுவர். முட்டுக்கட்டைகள் விலகும். கூட்டாளிகள் தக்க சமயத்தில் உதவ முன்வருவர். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் மூலம் லாபம் கூடும்.
* வியாபாரிகளில் குறிப்பாக தங்கம், வெள்ளி, வைர நகை வியாபாரிகள் அதிக லாபம் சம்பாதிப்பர். பெண்கள் வகையில் ஏற்பட்ட பிரச்னை பிப்.9க்கு பிறகு மறையும். அதன் பின் அதே பெண்கள் தவறை உணர்ந்து உங்களுக்கு உதவ முன்வருவர். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் சிறப்பான பலனை எதிர்நோக்கலாம். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை ஜன.22க்குள் கேட்டு பெற்று கொள்ளவும்.
* அரசு வேலையில் இருப்பவர்களுக்கு வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கு தடை இருக்காது. சக ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர்.
* ஐ.டி.,துறையினர் வளர்ச்சி காண்பர். சம்பள உயர்வுக்கு தடை இருக்காது.
* மருத்துவர்கள் பதவி உயர்வு காண்பர். சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர்.
* ஆசிரியர்கள் பதவி உயர்வு காண்பர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
* அரசியல்வாதிகளே,உங்களுக்கு துரோகம் செய்தவர்கள் தவறை உணர்ந்து பரிகாரம் தேடி உதவ முன்வருவர்.
* கலைஞர்கள் பிப்.4 க்கு பிறகு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். சக பெண் கலைஞர்கள் ஆதரவுடன் இருப்பர்.
* விவசாயிகள் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி  மகசூலை பெருக்குவர். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்புண்டு. பாசிப்பயறு நெல், சோளம், மஞ்சள், பச்சைக் காய்கறிகள் மூலம் வருமானம் உயரும். புதிய சொத்துகள் வாங்கும் எண்ணம் தாமதமாகும். வழக்கு விவகாரத்தில் முடிவு சாதகமாக அமைய வாய்ப்புண்டு. ஆனால் புதிய வழக்கு எதிலும் ஈடுபட வேண்டாம். பால்பண்ணை மூலம் நல்ல வருவாய் கிடைக்கும்.
* மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி பெறுவர்.

சுமாரான பலன்கள்

* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் ஜன.22க்கு பிறகு அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும்.  
* வக்கீல்களுக்கு வழக்கு, விவகாரங்களில் குழப்பம் உருவாகலாம். மனதில் இனம் புரியாத வேதனை குடியிருக்கும்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் இடமாற்றம் கிடைக்கப் பெறுவர். வேலையில் கூடுதல் கவனம் செலுத்தவும்.   
* அரசியல்வாதிகள் சிலர் தீயோர்  சேர்க்கையால் பண இழப்பை சந்திக்கலாம்.
* விவசாயிகளுக்கு பால்பண்ணை தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம்
கிடைக்காது.

பரிகாரம்:
* செவ்வாய்கிழமை முருகனுக்கு பாலபிஷேகம்
* சுவாதியன்று லட்சுமி நரசிம்மருக்கு நெய் தீபம்
* தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு

* நல்ல நாள்:  ஜன.15,18,19,24,25,26,27,28 பிப்.3,4,5,6,7,10,11
* கவன நாள்: ஜன. 29,30,31 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 1,9  
* நிறம்: நீலம்,சிவப்பு

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar