பதிவு செய்த நாள்
16
ஜன
2020
10:01
காஞ்சிபுரம்:வரதராஜ பெருமாள் கோவிலில், பொங்கலை முன்னிட்டு, இன்று காலை, சங்கராந்தி ஊர்வலம் நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், பொங்கலை முன்னிட்டு, இன்று காலை, 7:00 மணிக்கு நடைபெறும் சங்கராந்தி ஊர்வலத்தில், வரதராஜ பெருமாள், தேவியருடன் மாடவீதிகளை சுற்றி வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.ராப்பத்து உற்சவம், இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து, இரவு, 9:30 மணிக்கு வரதராஜ பெருமாள், பார்வேட்டை உற்சவத்திற்காக பழையசீவரம் புறப்பாடு நடைபெறும். செல்லும் வழியில், பெருமாளுக்கு மண்டகப்படி நடைபெறும்.