பதிவு செய்த நாள்
16
ஜன
2020
10:01
மாமல்லபுரம்:மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் பார்வேட்டை, நாளை மறுநாள், குழிப்பாந்தண்டலத்தில் நடக்கிறது.
மாமல்லபுரம் கோவிலின், ஸ்தலசயன பெருமாள், காணும் பொங்கல் நாளில், பார்வேட்டை உற்சவ உலாவாக, குழிப்பாந்தண்டலம், லட்சுமி நாராயண பெருமாள் கோவில் செல்வார்.நாளை மறுநாள், இந்த உற்சவத்தை முன்னிட்டு, அதிகாலை, 2:00 மணிக்கு, கோவில் நடை திறந்து, வழிபாடு நடக்கிறது.
தொடர்ந்து, உற்சவ சுவாமி, சக்கரத்தாழ்வாருடன், 4:00 மணிக்கு, உலா புறப்படுகிறார்.பூஞ்சேரி, பெருமாளேரி, வடகடம்பாடி பகுதிகளில் கடந்து, மதியம், குழிப்பாந்தண்டலம் கோவிலை அடைவார்.அங்கு, சிறப்பு அபிஷேக திருமஞ்சன வழிபாட்டைத் தொடர்ந்து, மாலையில், முயல் வேட்டையாடி, சுவாமி வீதியுலா செல்கிறார். பின், அங்கிருந்து மறுநாள் காலை, மாமல்லபுரம் கோவிலை அடைவார்