பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ராஜராஜேஸ்வரி கோவிலில் மார்கழி மாத நிறைவையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தன.
பெரியநாயக்கன்பாளையம் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள காமராஜ் நகரில் ராஜராஜேஸ்வரி கோவில் உள்ளது. இங்கு மார்கழி மாதத்தை ஒட்டி கடந்த, 30 நாட்கள் அதிகாலை சிறப்பு பூஜைகள் நடந்தன. அருள்மிகு ராஜராஜேஸ்வரி மற்றும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும், அன்னதானமும் நடந்தது. அம்மன் தினசரி பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் தினசரி அதிகாலை திருப்பாவை, திருவெம்பாவை பாடி இறைவனை வழிபட்டனர். மார்கழி மாத நிறைவையொட்டி, நேற்று கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ராஜராஜேஸ்வரி அம்மன் மற்றும் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். விழாவையொட்டி, அன்னதானம் நடந்தது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.