‘காஞ்சிபுரத்தில் மூன்று கோடி இருக்கு தெரியுமா?’ என ஒருமுறை காஞ்சிப்பெரியவர் பக்தர்களிடம் கேட்டார். அது பற்றி அறிய ஆவலாக இருப்பதாக தெரிவித்தனர். ‘‘காஞ்சி காமாட்சி கோயில் கருவறை மீது காமகோடி விமானம், ஏகாம்பரேஸ்வரர் கோயில் கருவறை மீது ருத்ரகோடி விமானம், வரதராஜப் பெருமாள் கருவறை மீது புண்யகோடி விமானம் உள்ளது. இது தான் அந்த மூன்று கோடி’’ என்றார்.