குருவிக்கு தக்கது ராமேஸ்வரம்‘குருவிக்கு தக்கது ராமேஸ்வரம்’ என்று பழமொழி சொல்வார்கள். குருவிக்கும் மதுரைக்கும் சம்பந்தமுண்டு. திருவிளையாடல் புராணத்தில் கருங்குருவிக்கு அருளியலீலையில் சொக்கநாதப் பெருமான் ஒரு குருவியின் சாபம் தீர்த்த வரலாறு வருகிறது. ராமேஸ்வரத்தைப் பொறுத்தவரை அவ்வூரின் நாயகன் ராமன். ராமபாணத்திற்கு தப்பியவர் யாருமில்லை. விஷ்ணு கிருஷ்ணாவதாரம் எடுத்த காலத்தில், ஜராசந்தன் என்பவனிடம் பலமுறை தோற்றிருக்கிறார். காரணம், அவர் போர்முறைக்காக சில தகிடுதத்தங்களைச் செய்ய வேண்டியிருந்தது. ஆனால், ராமன் போர்க்களத்தில் நின்ற காலத்தில் கூட ஆயுதமின்றி நின்ற ராவணனைக் கொல்லாமல் ‘இன்று போய் நாளை வா’ என்று சொல்லி தர்மத்தையும் சத்தியத்தையும் காத்தார். ராமனின் குறி தப்பாது என்பதை ‘குறிக்கு தக்கியது ராமசரம்’ என்று குறிப்பிடுவர். அதுவே மருவி ‘குருவிக்கு தக்கது ராமேஸ்வரம்’ என்றாகி விட்டது.