சேலம்: திருப்பதியில் நாளை நடக்கும் ரதசப்தமி விழாவுக்கு சேலத்திலிருந்து இரண்டு டன் பூக்கள் அனுப்பப்பட்டன.திருமலை திருப்பதியில் நாளை நடக்கவுள்ள ரத சப்தமி விழாவுக்கு சேலம் திருமலை திருவேங்கடமுடையான் நித்ய புஷ்ப கைங்கர்ய சபா சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் கருங்கல்பட்டி பாண்டுரங்கநாதர் மலைக்கோவில் தேவஸ்தான ஆனந்த நிலையத்தில் பூக்கள் தொடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மேரிகோல்டு ஆரஞ்ச் மஞ்சள் நிற பூக்கள் 2 டன் ஆரங்களாக மாலைகளாக பெண்கள் மக்கள் தொடுத்தனர். அதை சிறப்பு பூஜைக்கு பின் திருப்பதிக்கு அனுப்பிவைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை டிரஸ்டி பாலசுப்பிரமணியம் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.