சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக பணிகளுக்கான பாலாலயம் நடந்தது. நேற்று காலை பரமேஸ்வர பட்டர் தலைமையில் சிறப்பு யாக சாலை பூஜைகளுடன், அம்மன், ரேணுகாதேவி, விநாயகர், சுப்ரமணியர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பாலாலயம் செய்யப்பட்டது. அறநிலையத்துறை உதவி கமிஷனர் விஜயன், செயல் அலுவலர் சுசீலாராணி மற்றும் பதஞ்சலி சில்க்ஸ் உரிமையாளர் சுப்ரமணியன், முருகேசன், ராமு உள்ளிட்ட திருப்பணிக்குழுவினர் கலந்து கொண்டனர்.