திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தெப்பத்திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05பிப் 2020 01:02
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா நடந்தது.
ஜன.,26 கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில் தினமும் ஒரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார். நேற்று காலை ஜி.எஸ்.டி., ரோடு தெப்பக்குளத்திற்குள் விடப்பட்ட மிதவை தெப்பத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்பம் மூன்றுமுறை சுற்றி வந்தது.
ஊஞ்சலாட்டம்: இரவு 7:00 மணிக்கு மைய மண்டபத்தில் அமைக்கப்பட்ட ஊஞ்சலில் சுவாமி, தெய்வானை எழுந்தருளி பக்தி உலாத்துதல் முடிந்து மீண்டும் மிதவை தெப்பத்தில் எழுந்தருளினர். கோயில் துணை கமிஷனர்(பொறுப்பு) ராமசாமி, பணியாளர்கள் பங்கேற்றனர். தெப்பத் திருவிழா முடிந்து பக்தர்கள் திருக்கண் மண்டகப்படிகள், பின் சன்னதி தெரு சொக்கநாதர் கோயிலில் சுவாமி எழுந்தருளினார். அங்கு சூரசம்ஹார லீலை நடந்தது.