பதிவு செய்த நாள்
05
பிப்
2020
01:02
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில் அருகே அமைந்துள்ள ஆதி காசி லிங்கேஸ்வரர், அக்னி வீரபத்திரர், மற்றும் அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் இன்று (புிப்.,5ல்) கும்பாபிஷேகம் நடந்தது.
முதல் நாள் (புிப்.,3) அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, மஹா சங்கல்பம், வாஸ்து சாந்தி, பூரண கும்ப பூஜை, யாகசாலை பிரவேசித்தல். கணபதி பூஜை, தீபாராதனை நடந்தது.
இரண்டாம் நாள் (புிப்.,4)விக்னேஷ்வர பூஜை சதுர்வேத பாராயணம், பூர்ணாகுதி, தீப ஆராதனை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது. நான்காம் கால யாக பூஜைகள் சதுர்வேத பாராயணம், ரக்ஷாபந்தனம், மகா பூர்ணாஹூதி, தீபாராதனை செய்து யாகசாலையில் இருந்து புறப்பட்டு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் மூலவருக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மூங்கிலணை ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலய வழி வழி பூசாரிகள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர் சங்கர சுப்பிரமணியன் சிவாச்சாரியார் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.