ஊட்டி:ஊட்டி அருகே, பாலாடா கீழ் அப்புகோடு பகுதியில் உள்ள, ஆனந்த மலை முருகன் கோவில் கிருத்திகை பூஜை மற்றும் ஏழு ஹெத்தையம்மனுக்கு மாதாந்திர பூஜை சிறப்பாக நடந்தது. பூஜையை முன்னிட்டு, காலை, 10:00 மணி முதல், 12:00மணி வரை, ராமச்சந்திரன் குழுவினரின் பஜனை நடந்தது. பூஜைகளை மணியட்டி மகேஷ் நடத்தினார்.பூஜையில் ஊட்டி, பாலாடா, அப்புகோடு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். கிருத்திகை பூஜை விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் ஆசிரியர் ராமச்சந்திரன் உள்ளிட்ட கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.