மதுரை :மதுரை அயிலாங்குடி லட்சுமி வராஹ பெருமாள் கோயிலில் எட்டாவது வருஷாபிஷேக விழா நடந்தது.காலை 10:30க்கு வேத மந்திரங்கள் முழங்க வருடாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் எது பக்தி என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.கோயில் நிர்வாக அறவங்காவலர் சஷோத்திரி, அறங்காவலர் ஜம்புநாதன், ஆடிட்டர் சீனிவாசன், வழக்கறிஞர்கள் மணிவண்ணன், கிருஷ்ணவேணி, ராமகிருஷ்ணன், தொழிலதிபர் பாலசுப்பிரமணியன், தன்னார்வலர்கள் திருப்பதி, சீனிவாசன் பங்கேற்றனர்.