பூச நட்சத்திரம் கடக ராசிக்கு உரியது. இந்த ராசியின் அதிபதி சந்திரன். தை மாதத்தில் சூரியன் மகர ராசியில் இருப்பார். ஆக சூரியனும், சந்திரனும் ஒருவருக்கொருவர் நேருக்கு நேர் பார்த்துக் கொள்வர். தைபவுர்ணமியன்று, பூச நட்சத்திரம் வரும் போது இந்தப் பார்வை பக்தர்களுக்கு அதிக பலனைக் கொடுக்கும். இந்நாளில் நம் வேண்டுதல்கள் நிறைவேறும். பழநியில் முருகனுக்கு முக்கியத்துவம் என்றாலும், தைப்பூச விழா கொடியேற்றம் அடிவாரத்திலுள்ள பெரியநாயகியம்மன் கோயிலில் நடக்கிறது.