பதிவு செய்த நாள்
09
பிப்
2020
03:02
திருவாரூர்: ஞானபுரி சங்கடஹர மங்கள மாருதி ஆஞ்சநேயராருக்கு செய்யப்பட்டிருந்த வடை மாலை அலங்காரத்தை திரளான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குரு ஸ்தலத்திற்கு அருகே திருவோணமங்களம் ஞானபுரி சித்ரகூடசேத்ரம் ஸ்ரீ சங்கடஹர மங்கள மாருதி ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆஞ்சநேயருக்கு இரண்டுபுறமும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், ஸ்ரீகோதண்டராமர், சீதாதேவி, லட்சுமணர், பவ்ய ஆஞ்சநேயர் சன்னதிகள் அமைந்துள்ளன. இங்கு எழுந்தருளியுள் ள 33 அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஆஞ்சநேயர் இடுப்பில் நோய் மற்றும் சங்கடங்களை நிவர்த்தி செய்யும் சஞ்சீவி மூலிகைகள் ஆன மிருத சஞ்சீவினி., விசல்லிய கரணீ., ஸாவ ர்ண கரணீ., ஸந்தான கரணீ ஆகிய நான்கு வகையான மூலிகைகளுடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது உலகில் வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும். ஸ்ரீசங்கடஹர மங்கள மாருதி ஆ ஞ்சநேயரை வழிபட்டால் சங்கடங்கள் யாவும் நீங்கி மங்களம் உண்டாகும். இத்தகைய சிறப்பு மிக்க கோயிலின் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் 7ம் தேதி வெள்ளிக்கிழமை நடை பெற்றது. அதனையடுத்து நேற்று சனிக்கிழமை காலை முதல் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு ஆச்சாரிய மகா சாமிகள் அருளாசி வழங்கினார் மாலை ஆஞ்சநேய சுவாமிக்கு ஒரு லட்சம் வடை மாலை சாற்றப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீ ஜகத்குரு பதரி சங்கராச்சாரியார் சமஸ்தானம் ஸ்ரீ வித்யா பீட ம், ஸ்ரீவித்யா அபிநவ ஸ்ரீஸ்ரீகிருஷ்ணா நந்த தீர்த்த மகா சுவாமிகள் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகளை செய்வித்தார். இதனை திரளான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஆஞ்கநேய சுவாமி வெள்ளித் தேரில் எழுந்த ருள தேரோட்டம் நடைபெற்றது. அதில் 100க்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.