பதிவு செய்த நாள்
10
பிப்
2020
10:02
திருக்கோவிலூர்:திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சண்முகப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், தைப்பூசத்தை முன்னிட்டு, சண்முகப் பெருமானுக்கு காலை 8:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், கலச ஸ்தாபனம், பஞ்சாசன பூஜை, பஞ்சாவரண பூஜை, கலசாபிஷேகம் நடந்தது.வள்ளி தேவசேனா சமேத சண்முகப் பெருமான் விபூதி மற்றும் வெள்ளிக் கவசத்தால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.மாலை 6:00 மணிக்கு லட்சார்ச்சனை, சிறப்பு வழிபாடு நடந்தது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.