பதிவு செய்த நாள்
10
பிப்
2020
10:02
திருப்பதி: திருமலையில், பவுர்ணமியை ஒட்டி, நேற்றிரவு கருட சேவை நடந்தது. திருமலையில், தை மாத பவுர்ணமியை முன்னிட்டு, நேற்றிரவு, 7:00 முதல், 9:00 மணி வரை, மலையப்பஸ்வாமி கருட வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். பவுர்ணமி கருட சேவையை ஒட்டி, திருமலையில் நேற்று திவ்யபிரபந்த மகோற்சவம் நடந்தது. திருமலையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில், 200 ஆச்சாரியார்கள், காலை, 10:00 முதல் திவ்ய பிரபந்தத்தை கோஷ்டி கானம் செய்தனர். பின், மீண்டும் மாலை, 4:00 முதல், 5:00 மணி வரையிலும், பின், இரவு கருட சேவையின் போதும் அவர்கள் திவ்யபிரபந்த பாசுரங் களை பாராயணம் செய்தனர்.