மேட்டுப்பாளையம் குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2020 12:02
மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே, மேற்குதொடர்ச்சி மலைச்சாரலில், குருந்தமலையில் சுமார் 1000 ஆண்டு பழமைவாய்ந்த குழந்தைவேலாயுத ஸ்வாமி திருக்கோவில் உள்ளது.
இக்கோவிலில் தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு கடந்த 1 ம்தேதி கிராமசாந்தியுடன் தொடங்கி பிப்ரவரி 2 ம் தேதி கொடியேற்றமும், அம்மன் அழைப்பு ,திருக்கல்யாண உற்சவம் ,யானை வாகனம் நடைபெற்று தைப்பூசத்தன்று அதிகாலை வள்ளி ,தெய்வானை சமேத குழந்தைவேலாயுத ஸ்வாமி திருத்தேரில் எழுந்தருளினார்.அதைதொடர்ந்து திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியில் மாலை 6 மணிக்கு தொடங்கியது.இதில் மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் ,சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே.சின்ராஜ்,கிட்டாம்பாளைம் ,புங்கம்பாளையம் தேக்கம்பட்டி ,செல்லப்பலனூர் அரசப்பனூர் உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்தவர்களான கோவில் மிராசு தாரர்கள் கலந்துகொண்டனர். அறநிலையத்துறை சார்பில் குருந்தமலை திருக்கோவில்,தக்கார் பெரிய மருதுபாண்டியன் செயல் அலுவலர் ராமஜோதி, விழா ஏற்பாட்டினை செய்து இருந்தனர்.