பதிவு செய்த நாள்
17
பிப்
2020
05:02
பிப்.14, மாசி 2: முகூர்த்த நாள், சஷ்டி விரதம், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி பிரம்மோற்ஸவம் ஆரம்பம், ராமநாதபுரம் முத்தாலம்மன் உற்ஸவம் ஆரம்பம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் திருமஞ்சனம், சங்கரன் கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம், ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார், திருவிடை மருதுார் பிரகத்குசாம்பிகை பவனி, திருத்தணி முருகன் கிளி வாகனம்
பிப்.15, மாசி 3: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினியம்மன் கற்பகவிருட்சம், காமதேனு வாகனம், ஸ்ரீவில்லிபுத்துார் பெரியாழ்வார் பவனி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் வரதராஜர் திருமஞ்சனம், திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு ஆராதனை
பிப்.16, மாசி 4: தேய்பிறை அஷ்டமி, பைரவர் வழிபாடு, காளஹஸ்தி, திருக்கோகர்ணம், ஸ்ரீசைலம், திருவைகாவூர் தலங்களில் உற்ஸவம் ஆரம்பம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தியம்மன் பூதம்,கிளி வாகனம், ராமநாதபுரம் முத்தாலம்மன் பவனி, கீழ்த்திருப்பதி கோவிந்தராஜர் சன்னதி எதிரில் அனுமன் திருமஞ்சனம்
பிப்.17, மாசி 5: திருக்கோகர்ணம் சிவன் பவனி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி கைலாச, சிம்ம வாகனம், சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம், சென்னை திருவல்லிக்கேணி பெருமாள் திருமஞ்சனம்
பிப்.18, மாசி 6: கோவை கோனியம்மன் பூச்சாற்று விழா, காளஹஸ்தி சிவன் பவனி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி யானை வாகனம், சுவாமிமலை முருகன் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் பவனி, திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதியம்மன் திருமஞ்சனம்
பிப்.19, மாசி 7: ஏகாதசி விரதம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினியம்மன் ரிஷப வாகனம், ஸ்ரீசைலம் சிவன் பவனி, ஸ்ரீரங்கம் பெருமாள் அலங்கார திருமஞ்சனம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல், திருமோகூர் காளமேகப்பெருமாள் பவனி, வேதாரண்யம் மறைநாதசுவாமி உற்ஸவம் ஆரம்பம், காரிநாயனார் குருபூஜை
பிப்.20, மாசி 8: முகூர்த்த நாள், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினியம்மன் முத்தங்கி சேவை, திருகோகர்ணம் சிவன் சேஷ வாகனம், திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல், சுவாமி மலை முருகன் வைரவேல் தரிசனம், வேதாரண்யம் மறைநாதசுவாமி பவனி, திருவண்ணாமலை யோகிராம் சுரத்குமார் நினைவு தினம்
பிப்.21, மாசி 9: மகாசிவராத்திரி, திருவோணவிரதம், பிரதோஷம், முகூர்த்த நாள், மூங்கிலணை காமாட்சியம்மன் திருவிழா, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினியம்மன் வெள்ளித்தேர், காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருக்கோகர்ணம் கோயில்களில் சிவன் ரிஷபவாகனம், கடம்பூர் சண்முகநாதசுவாமி கோயில் பூக்குழி விழா
பிப்.22, மாசி 10: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினியம்மன் தேர், ராமநாதபுரம் முத்தாலம்மன் பவனி, காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருக்கோகர்ணம், திருவைகாவூர் கோயில்களில் சிவன் தேர், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்களில் வரதராஜர் திருமஞ்சனம், குச்சனுார் சனீஸ்வரர் ஆராதனை