பொருள்: எவன் ஒருவன் வெளித்தோற்றத்தில் புலன்களை அடக்கியதாக காட்டிக் கொண்டு, மனதில் எப்போதும் ஆசைகளை நினைக்கிறானோ அவன் பொய் நடத்தையுள்ளவன். இவனை ‘ஆஷாடபூதி’ என அழைப்பர். இதை விடுத்து எவன் ஒருவன் மனதால் புலன்களை தன்வசப்படுத்தி, கடமையில் கண்ணாக இருக்கிறானோ அவனே சிறந்தவன்.