பதிவு செய்த நாள்
19
பிப்
2020
12:02
மேல்நல்லாத்துார்: மேல்நல்லாத்துார், அங்காள பரமேஸ்வரி கோவிலில், வரும், 23ம் தேதி, மயானக் கொள்ளை உற்சவம் நடைபெற உள்ளது. கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட மேல்நல்லாத்துார் கிராமத்தில் உள்ளது அங்காள பரமேஸ்வரி கோவில். இங்கு, 18ம் ஆண்டு மயானக் கொள்ளை உற்சவம், வரும், 23ம் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக வரும், 21ம் தேதி, காலை, 9:00 மணிக்கு மேல், காலை, 10:30 மணிக்குள் அம்மனுக்கு காப்பு கட்டுதலும், சிறப்பு அபிஷேகமும் நடைபெறும். பின், மறுநாள், காலை, 7:00 மணிக்கு மேல், காலை, 9:00 மணிக்குள், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு, 7:00 மணிக்கு பதிவு அலங்காரமும், சிறப்பு அபிஷேகமும் நடைபெறும். மயானக் கொள்ளை உற்சவ நாளான, 23ம் தேதி, காலை, 6:30 மணிக்கு மஹா அபிஷேகத்திற்கு தீர்த்தக்குடம் ஊர்வலம் வந்து, பொங்கல் வைத்தலும், காலை, 9:00 மணிக்கு, மஹா அபிஷேகமும், வேல் குத்துல், தீச்சட்டி எடுத்தல், அம்மன் வீதி உலா ஆகியன நடைபெறுகின்றன. பின், மாலை, 4:00 மணிக்கு, மயானக் கொள்ளை உற்சவம் நடைபெறும்.