சிவராத்திரியன்று சிவலிங்கத்திற்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்தால் முற்பிறவியில் ஏற்பட்ட பாவங்கள் தீரும். ஒரே காம்பில் மூன்று இலையுடன் கூடிய வில்வத்தால் சிவனை அர்ச்சிப்பது சிறப்பு. இதனை சிவனின் திரிசூலம் என்றும், முக்கண் குறியீடு என்பர். லட்சுமி வாசம் செய்வதால் வில்வ மரத்தை ‘ஸ்ரீவிருட்சம்’ என்பர். இதன் இலைகளால் சிவனை வழிபட்டால் செல்வம் சேரும். இந்த மரத்தை வீட்டில் வளர்த்தால் சிவபுண்ணியம் பெருகும். காசி முதல் ராமேஸ்வரம் வரையுள்ள சிவத்தலங்களை தரிசித்த பலன் கிடைக்கும்.