ஜைத் என்ற இளைஞர் நாயத்திடம் அடிமையாக இருந்தார். ஆனால் ஜைத்தை தனக்கு சமமானவராகவே கருதி பழகினார். ஒருமுறை ஜைத்தின் தந்தை தன் மகனை வீட்டுக்கு அழைத்துச் செல்ல முன் வந்தார். ஆனால் ஜைத் புறக்கணித்தார். ‘‘என்னை பெற்ற பிள்ளையாக கவனிக்கிறார்கள். நான் இங்கேயே இருக்க விரும்புகிறேன்’’ என்றார் ஜைத். அது மட்டுமல்ல, நாயகத்தின் அத்தை மகள் மைமூனாவை அவனுக்கு திருமணமும் செய்து வைத்தார். அடிமைக்கு தன் உறவுக்காரப் பெண்ணை மணம் செய்து வைத்தார் என்றால் நாயகத்தின் நற்பண்பை நாம் யூகிக்க முடியும். ஜைத்தின் மகன் உஸமாவைத் தன் பேரனாகவே கருதினார் நாயகம்.