பதிவு செய்த நாள்
25
பிப்
2020
12:02
சென்னை: திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், மாசி மாத ஏழு நாள் தெப்பத் திருவிழா, விமரிசையாக நடந்து வருகிறது.
திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இக்கோவிலின் திருக்குளம், இந்திர, சோம, மீன, அக்னி, விஷ்ணு ஆகிய ஐந்து தீர்த்தங்களைக் கொண்டு, கைரவீணி எனும் பெயருடன் விளங்குகிறது. ஒவ்வோர் ஆண்டும், மாசி மாதத்தில், ஏழு நாட்கள் தெப்ப உற்சவம் விமரிசையாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தெப்ப உற்சவம், நேற்று முன்தினம் துவங்கியது. இதில், முதல் மூன்று நாட்கள், பார்த்தசாரதி சுவாமி, தெப்பத்தில் வலம் வந்து அருள் பாலிக்கிறார். அடுத்த நான்கு நாட்களில், நரசிம்மர், ரங்கநாதர், ராமர், கஜேந்திரவரதராஜ சுவாமி ஆகியோர், தெப்பத்தில் தினமும் மாலை, 6:30 மணிக்கு வலம் வந்து அருள் பாலிக்கின்றனர்.