பதிவு செய்த நாள்
03
மார்
2020
11:03
திருப்பூர்: அய்யா வைகுண்ட திருப்பதியில் நேற்று, வைகுண்டர் அவதார தின விழா பவனி நடந்தது; நாம கொடி ஏந்தியவாறு பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.அய்யா வைகுண்ட சுவாமியின், 188வது அவதார தின விழா, திருப்பூர் கோதபாளையம், தாமரை நகரில் உள்ள அய்யா வைகுண்ட திருப்பதியில் நேற்று துவங்கியது.
மதியம் 12:00 மணிக்கு உச்சிப்படிப்பை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. பிற்பகல், 3:00 மணிக்கு அய்யா வைகுண்டர் புஷ்பக வாகனத்தில் எழுந்தருளினார்.காலேஜ் ரோடு, ஐயப்பன் கோவில் அருகில் துவங்கிய திருவீதி உலாவை, வைகுண்ட திருப்பதி டிரஸ்ட் கவுரவ தலைவர் வைகுண்ட ராஜா துவக்கிவைத்தார். பக்தர்கள் நாமக் கொடி, முத்துக்குடை பிடிக்க, செண்டை, நாதஸ்வரம் வாத்தியங்களுடன் ஊர்வலம் சென்றது.இரவு, 7:00 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடையை தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, 9:00 மணிக்கு, இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.இன்று காலை, 5:00 மணிக்கு வைகுண்ட சுவாமி அவதார தின சிறப்பு பணிவிடை, தவணைப் பால் தர்மம், சிற்றுண்டி தர்மம் நடக்கிறது. மதியம், 1:00 மணிக்கு அன்னதானம், மாலை, 5:00 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை நடக்கிறது.